பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வி
பெறும் உரிமை சட்டத்தின் பிரிவின் கீழ் அனைத்துப்பள்ளிகளிலும் 25 சதவீத
மாணவர் சேர்க்கை இடங்கள் நலிவடைந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
அதன்படி 2013-14-ம் ஆண்டில் நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மொத்தம்
21.40 லட்சம் இடங்கள் நலிவடைந்த பிரிவினரைக்கொண்டு நிரப்பப்பட்டிருக்க
வேண்டும். ஆனால், இவற்றில் 29 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாக
ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
தமிழ்நாட்டை
எடுத்துக்கொண்டால் மொத்தம் 1.43 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் நலிவடைந்த
பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்-ஆனால், இவற்றில் வெறும் 11
சதவீத இடங்கள் மட்டுமே நலிவடைந்த பிரிவினரைக்கொண்டு நிரப்பப்பட்டதாகவும்
ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நடப்பாண்டில்
தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச்சட்டப்படி ஒதுக்கப்பட்ட 89,941
இடங்கள் நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவர்களைக் கொண்டு
நிரப்பப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கான கல்விக்கட்டணமாக ரூ.26.13 கோடி
நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
வீரமணியும், செயலாளர் சபீதாவும் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
ஆனால்
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளி விவரங்களில்
மொத்தம் 2,959 மாணவ, மாணவியர் மட்டும் தான் தனியார் பள்ளிகளில்
சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி
பெறும் உரிமைச்சட்டம் தமிழகத்தில் இதுவரை எவ்வாறு
செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில்
அது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.