அஞ்சலகங்களில் செல்வமகள்
சேமிப்புக் கணக்குத் தொடங்க விரும்பும் பொதுமக்கள் வசதிக்காக
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அஞ்சலகங்கள் செயல்படும் என, அஞ்சல் துறை
அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:நிகழாண்டில் ஜனவரி 30-ஆம் தேதி, பெண் குழந்தைகளுக்கான
"சுகன்யா சம்ரித்தி' சேமிப்புக் கணக்கு என்கிற திட்டம் தொடங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியால் நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கி
வைக்கப்பட்டது.
தமிழகத்தில் அஞ்சல் துறை மூலம் "செல்வமகள் சேமிப்புத்
திட்டம்' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்
கீழ், அஞ்சல் துறை நடப்பு நிதியாண்டில் 1 கோடி அளவுக்கு சேமிப்புக்
கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் அறிமுகம்
செய்யப்பட்ட ஓரிரு மாதங்களில், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து
வருகிறது. ஆகையால், செல்வமகள் சேமிப்புக் கணக்குத் தொடங்க வருபவர்களின்
வசதிக்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) அஞ்சலகங்கள் செயல்பட்டன.
அதைத் தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமையும் (மார்ச்
29) அஞ்சலகங்கள் இயங்கும். அதாவது, சென்னை நகர மண்டலத்துக்குள்பட்ட 20
தலைமை அஞ்சலகங்களும், 55 துணை அஞ்சலகங்களும் செயல்படும். மேலும், கூடுதல்
விவரங்களுக்கு 94430-48028 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.