பி.இ. 2–வது ஆண்டு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பம் 13–ந் தேதி முதல் வழங்கப்படுகிறது.
நேரடி மாணவர் சேர்க்கை
2015–2016–ம் கல்வியாண்டில் தமிழ் நாட்டிலுள்ள அரசு, அரசு உதவி
பெறும், சுயநிதி, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் நேரடி 2–வது ஆண்டு
என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் தமிழ்நாட்டில் 34
என்ஜினீயரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் வருகிற 13–ந் தேதி
முதல் ஜூன் மாதம் 9–ந் தேதி முடிய விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
விண்ணப்பப்
படிவங்களை நேரடியாக பெற விரும்புவோர் பிற இனத்தவர் ரூ.300–க்கான கேட்பு
வரைவோலையினை (12.5.2015–க்கு பின் பெறப்பட்ட வகையில்) செயலாளர், 2–வது
ஆண்டு பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2015, அழகப்பா செட்டியார்
என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி–630004 என்ற பெயரில்
காரைக்குடியில் காசாக்கும் வகையில் எடுத்து விண்ணப்பங்களை மேற்காணும்
விற்பனை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டைச் சார்ந்த
பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்), பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர்,
விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக்கொள்ள, சுய சான்றிடப்பட்ட சாதிச்
சான்றிதழின் நகலை ஒப்படைத்து விண்ணப்பத்தினை மேற்காணும் விற்பனை மையங்களில்
பெற்றுக்கொள்ளலாம்.
கடைசி நாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை செயலாளர், 2–வது ஆண்டு
பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை 2015, ஏசிசிஇடி, காரைக்குடி –630004 என்ற
முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர ஜூன் 9–ந்
தேதி கடைசி நாள்.
கலந்தாய்வு ஜூன் மாதம் கடைசி வாரத்தில்
காரைக்குடியில் அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும்.
இதற்கான அழைப்பு கடிதம் உரியவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வுக்கான நாள், நேரம் அழகப்ப செட்டியார்
பொறியியல் கல்லூரி இணையதளத்தில் (www.accet. edu.in ) வெளியிடப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது







