எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப்
பட்டியலை மருத்துவக் கல்வி இயக்கம் இன்று வெளியிட்டுள்ளது. இதில் 200-200
கட் ஆப் மதிப்பெண் பெற்று 17 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில்
20 அரசு மருத்துவக்கல்லூரிகள் (தற்போது புதிதாக சேர்க்கப்பட்ட ஓமந்தூரார்
அரசு மருத்துவக்கல்லூரி உள்பட) உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.
படிப்பில் சேர 2,655 இடங்கள் இருக்கின்றன.
இதில்
தேசிய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் சென்றுவிடும். மீதமுள்ள 2,257
இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். இந்த இடங்களில் மாணவ–மாணவிகள் சேர 32
ஆயிரத்து 184 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கான
ரேண்டம் எண் கடந்த 11–ந்தேதி வெளியிடப்பட்டது. அந்தவகையில், எம்.பி.பி.எஸ்.
படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பபட்டது.
இந்த தரவரிசை பட்டியலை, சென்னை, கீழ்பாக்கம், மருத்துவகல்லூரி
இயக்குனரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். இதில் 200க்கு 200
கட்ஆப் மதிப்பெண்களுடன் 17 மாணவர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி
மாவட்ட மாணவர் நிஷாந்த் ராஜன் முதலிடம் பிடித்துள்ளார். திருச்சி
சமயபுரத்தைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் 2-ம் இடமும், திருச்செங்கோடு பிரவீன்
3-ம் இடமும், நிவாஜ் 4-ம் இடமும் பிடித்தனர். சரவணராஜ் 5-ம் இடத்தைப்
பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து வருகிற 19–ந்தேதி முதல் 25–ந்தேதி வரை
முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.







