முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான "கேட்- 2016' தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இணையம் மூலம் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 1 கடைசித் தேதியாகும்.முதுநிலை
பொறியியல் படிப்புகளில் மத்திய அரசின் உதவித் தொகையுடன் படிக்க "கேட்'
(பொறியியல் பட்டதாரி நுண்ணறி தேர்வு) தேர்வில் தகுதி பெறுவது அவசியம். சில
கல்லூரிகள் இந்தத் தேர்வில் தகுதி பெற்றவர்களை மட்டுமே, முதுநிலை பொறியியல்
படிப்புகளில் சேர்த்துக்கொள்கின்றன.இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.), ஐஐடி நிறுவனங்கள் இணைந்து இந்தத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகின்றன.
2016-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு 2016 ஜனவரி 30-ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இந்தத்
தேர்வுக்கு இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்
கட்டணமும் இணைய வங்கிச் சேவை, கடன் அட்டை, டெபிட் கார்டு, இ-சலான் ஆகிய
முறைகளில் மட்டுமே செலுத்தவேண்டும். இதுபோல், தேர்வு அனுமதிச் சீட்டையும்
இணையதளத்திலிருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். தபால்
மூலம் அனுப்பப்பட மாட்டாது.
தேர்வில் இடம்பெறும் 23 தாள்களும் இணையம்
மூலம் மட்டுமே எழுத வேண்டும். தேர்வு முடிவுகள் 2016 மார்ச் 19 ஆம் தேதி
இணையத்தில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களை http:gate.iisc.ernet.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.