பெற்ற தாயை மாட்டுத்தொழுவத்தில் தங்க வைத்த பிள்ளைகள்-மனித உரிமை ஆணையம் நடவடிக்கை:
பெற்ற தாயை மாட்டுத்தொழுவத்தில் தங்க வைத்த பிள்ளைகள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாட்டுத்தொழுவத்தில் தாய்
கொல்லம் புத்தூரை சேர்ந்தவர் குஞ்சம்மா (வயது 90). இவருடைய கணவர் ஏற்கனவே காலமானதை தொடர்ந்து தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு 8 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் ஒருவர் கூட தாயை கவனிக்க முன் வரவில்லை.
வயதான நிலையில், உடல் தளர்ந்து பேசக்கூட சக்தி இழந்து, அவரது வீட்டின் பின்
புறத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் தங்கி காலத்தை கழித்து வந்தார். இந்த
நிலையில் மாற்றுத்துணி கூட இல்லாமல் உடல் நலிந்த நிலையில் கஷ்டப்பட்ட அந்த
பெண் குறித்து பத்திரிகைகளில் வெளியானது.மாட்டுத்தொழுவத்தில் தாய்
கொல்லம் புத்தூரை சேர்ந்தவர் குஞ்சம்மா (வயது 90). இவருடைய கணவர் ஏற்கனவே காலமானதை தொடர்ந்து தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு 8 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் ஒருவர் கூட தாயை கவனிக்க முன் வரவில்லை.
பிள்ளைகள் மீது வழக்கு
இதனையடுத்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.என்.பட்டதிரி அந்த பெண்ணை கலயபுரம் முதியோர் இல்லத்தில் சேர்த்தார். இதனிடையே வயதான தாயை கைவிட்ட பிள்ளைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்தது. தாயை கவனிக்காமல் கைவிட்ட, 8 பிள்ளைகள் மீதும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.







