y,g - b,d,- i,l- h,n -,g,q இவைகள் இவனுக்கு குழப்பம் தருவதாக இருக்கின்றன.
இதை அவனுக்கு ஒரே ஒரு வினாவுக்கான பதிலை கற்றுத்தர ஆரம்பித்த உடனே புரிந்துக்கொண்டான் அறிவுச்செல்வன்.உடனே அந்த எழுத்துக்களை அருகருகே எழுதி விளக்கினான்.பிறகு அந்த எழுத்துக்களை அந்த வினா விடையில் அடையாளம் காட்டி விளக்கினான்.
பிறகு அவனை கண்டுபிடிக்க சொன்னான். எனக்கு பெருமிதமாய் இருந்தது.
ஆனால் அறிவுச்செல்வனை பார்க்கும்போதெல்லாம் எனக்கு அவனை ஆசிரியராக செய்ய வேண்டும் என்ற உந்துதலே மேலோங்கும்.அவனுடைய ஆர்வமும்,தன் பணியில் அவனுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும் அருமை.
பிள்ளைகள் படிக்கவில்லையா? உடனே அவனுக்கு எங்கே புரியவில்லை? என்ன சிக்கல் என ஆராய்ந்து தன் கற்பித்தல் முறையை மாற்றி அமைத்து தன் பணியை சளைக்காமல் தொடர்வான்.
ஆசிரிப்பணியைப் பொறுத்தவரை இது மிக மிக அவசியம். வேறு வழியின்றி இந்த பணிக்கு வந்தவர்களால் முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட முடியாது.விரைவில் சலித்து போய் விடும்.எனவே அர்ப்பணிப்பு உணர்வுடன்,இப்பணியின் மீது உள்ளார்ந்த நேசிப்பும்,புதுப்புது கற்பித்தல் முறைகளை கையாளும் ஆர்வமும் கொண்டவர்களே ஆசிரியப்பணிக்கு இப்போதைக்கும் ,எப்போதைக்குமான தேவை!
இது போன்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை ஆசிரியப்பணிக்கு வழிநடத்துவது நல்ல ஆசிரியர்களது கடமை. இயந்திரங்களுடன் பணிபுரிய எல்லோராலும் முடியும்; குழந்தைகளுடன்.. ......?








