இதற்காக பள்ளிக்கல்வித்துறையும், தேர்வுத்துறையும் இணைந்து, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணையை தயாரித்தன. ஆனால், அந்தகோப்பு, அரசு அனுமதிக்காக பல நாட்களாக கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், தேதி அறிவிப்பு தாமதம் ஆகியுள்ளது.இதனால், அதிருப்தி அடைந்துள்ளஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது: நடப்பு கல்வி ஆண்டில், மாணவர்கள் பல விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக, மழை வெள்ளத்தால், ஒரு மாதம் வகுப்பு நடத்தவில்லை.இந்நிலையில், பொதுத் தேர்வைஎழுத வேண்டிய மாணவர்களுக்கு, தேதி தெரிந்தால், அதற்கேற்ப திட்டமிட்டு படிக்கலாம். வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு தேர்வு அட்டவணையை, இன்னும் வெளியிடாமல் இழுத்தடிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.