இன்றைய மத்திய பா.ஜ.க அரசு ரெயில்வே துறையை அதிக லாபம் ஈட்டும் வணிகத்துறையாக மாற்ற பயணிகள் மீது சுமையை ஏற்றுகிறது. சமீபத்தில் பொது பயணச்சீட்டை ரத்து செய்வதற்கான கட்டணம் ரூபாய் 30-ல் இருந்து ரூபாய் 60 ஆக உயர்த்தப்பட்டது.
மேலும் 5 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயணித்தால், பாதிக்கட்டணம் செலுத்தினால் போதும் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால் தற்போது சாதாரண இரண்டாம் வகுப்பை தவிர்த்த பிற வகுப்புகளில் குழந்தைகள் பயணித்தால் முழுக்கட்டணமும் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை புகுத்தப்பட்டுள்ளது.








