தான் இஷ்டப்படி வளருற கன்னுக்குட்டிய தேர்ந்தெடுப்போம்,
சுழி சுத்தமாவும் ரோசமாவும் இருக்கும் யார் தொட வந்தாலும் முட்டா வரும்,
சின்னதா எதுப்பட்டாலும் துள்ளும்.
☞ பகல்ல கைப்பிடியா மேய்ச்சல்ல வைச்சு இராத்திரி பசும்புல்லை அறுத்து போடுவோம்,
கழுத்து தேய கூடாது நூல் கயிறுகட்டி எங்க கையில இருக்க பிடி கயித்தை இறுக்கி வைப்போம்.
கழுத்து தேய கூடாது நூல் கயிறுகட்டி எங்க கையில இருக்க பிடி கயித்தை இறுக்கி வைப்போம்.
☞ கண்ட கருமத்தை திங்க கூடாதுன்னு வாய்க்கூடு போட்டு வைப்போம்,
கார்த்திகை மார்கழில அதிகாலை பணிப்புள்ளை மேய வைப்போம், தண்ணீ அதிகம் போய் வயிறு பெருத்துடக்கூடாது,
அளவா தினையும் சோளம் கலந்து சத்தா கொடுத்து, புன்னாக்கு,பருத்தி,அருகம்புல்,
துவரை எல்லாம் போட்டு உறுதியாக்குவோம்.

☞ முக்கனாங்கயிறு போட்ட புள்ளைக்கு(காளைக்கு) குத்தும் கழுத்து கயிறை
மட்டும் பிடிச்சு வாரத்துல ஒரு நாள் குளம்,வாய்க்கா,ஆத்துக்கு கொண்டு போய்
சாயங்காலமா நீச்சல் அடிக்க விடுவோம்.
☞ நல்லா மேல் முடி விழுக தேச்சி கழுவி,எட்டு பல்லு விழுந்த பிறகு தான் முக்கனாங்கயிறே போடுவோம்.
☞ கத்திரி, அவரைன்னு பகல்யும், பருத்தி விதையை ஊறப்போட்டு மதியத்துக்கும் சுத்தமான வைக்கோல் போட்டு வளர்ப்போம்.
மட்டமான ஏதாவது சாப்பிட்டு புள்ளக்கு(காளைக்கு) பல்லு போய்டக்கூடாதில்ல.
மட்டமான ஏதாவது சாப்பிட்டு புள்ளக்கு(காளைக்கு) பல்லு போய்டக்கூடாதில்ல.
☞ சுக்கு, மொளவு, திப்பிலி, சீரகம், கசாகசா, ஓமம், பூண்டு, மொளவாவத்த,
கெராம்பு, சாதிக்கா, கடுக்கா, அதிமதுரம், உப்பு, சின்ன வெங்காயம், மல்லி,
பெருங்காயம், ஏலக்கா, பனைவெல்லம் எல்லாத்தையும் ஒரல்ல போட்டு இடிச்சு
பொடிதான் சத்து மருந்தா கொடுத்து, அருகம்புல்லு ஆவாரம்பூவு அவர இல, ஆல இல,
கொய்யா இல, எலுமிச்ச இல, தூதுவள, வேப்பிலை, அரச இல, மொடக்காத்தா இல,
பொன்னாங்கண்ணி, அகத்தி, முருங்க இல, வில்வ இல, செம்பருத்தி,
சோத்துக்கத்தாழ, சிறியாநங்க, வாழப்பூவு, வெத்தல, பெரண்டஎல, மணத்தக்காளி,
மொசுமொசுக்கை, கீழாநெல்லி, புதினா, குப்பமேனி, நிலவேம்பு, வெட்டிவேரு,
வேலிப்பருத்தி, தொளசி, ஆடுதொடாஎல, வல்லார, இதெல்லாம் நறுக்கி போட்டு
ரெண்டு மூனு நாளு காயவச்சு ஒரல்ல இடிச்சி பொடிச்சு ஒன்னா கலந்து கைத்தண்டி
உருண்ட பிடிச்சி அதை மஞ்சள் கூட சேர்த்து மூனு மாசத்துக்கு ஒரு தடவை
கொடுக்கனும் அப்ப தான் எந்த நோயும் வராது.
☞ உடலுக்கு ஏத்த பலம்
காலுக்கு வேணுமின்னு காட்டுப்பக்கம் நடக்க வைச்சு, அத சீண்டி, செம்மண்னை
குத்த விட்டு பழக்கி தான் வாடிவாசல்க்கே வரும்.
அதுவரை அந்த பயல(காளைய) ஒரு புள்ளத்தாச்சி மாதிரி பார்த்துக்குவோம்.
அதுவரை அந்த பயல(காளைய) ஒரு புள்ளத்தாச்சி மாதிரி பார்த்துக்குவோம்.
இத்தனை பராமறிப்பும் ஒரே ஒரு நாளுக்காகதான்,
அது உழவர் திருநாளுக்காக.
அது உழவர் திருநாளுக்காக.
பாரம்பரியம் காப்போம்.