பருவத்தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி
வழங்கப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் தகவல்களை மேம்படுத்துதல் மற்றும்
ஆதார்எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை மத்திய உள்துறை
அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடியுரிமைப் பதிவுதலைமைப்பதிவாளர்
அலுவலகம் செய்து வருகிறது.
இப்பணிகளில்
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கணக்கெடுப்பு பணிகளை பள்ளி வேலை நேரம் முடிந்து மாலையில்தான் மேற்கொள்ள
வேண்டும் எனவும், ஜன.18ல் துவங்கி பிப்.5க்குள் முடிக்கவும்
உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த கணக்கெடுப்பு பணிக்காக ஆசிரியர்கள் தாங்கள்
பணியாற்றும் பகுதிகளில் இருந்து தொலைதூர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை
உள்ளது. மழை வெள்ளத்தால், ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் தற்போது பள்ளிகளில்
நடந்து வருகின்றன. இச்சூழலில் கணக்கெடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளதற்கு
ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.