இதை விட பெரியதுடன் ஒப்பிட்டால் இது சிறியதாகிவிடும். - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இதை விட பெரியதுடன் ஒப்பிட்டால் இது சிறியதாகிவிடும்.

மாதவன் ஏழாம் வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவன். நன்றாக படிக்கும் அவனுக்கு சுமாராக படிக்கும் மாணவர்களை கேலி செய்யும் ஒரு பழக்கம் இருந்தது. ஒவ்வொரு முறை தேர்வுத் தாளை திருத்திக்  கொடுக்கும் போதும் தன்னுடைய விடைத்தாளை எடுத்துக் கொண்டு சுமாராக படிக்கும் மாணவர்களிடம் சென்று தான் மட்டுமே அந்த வகுப்பில் அறிவாளி, மற்றவர்கள் எல்லோரும் அறிவில்லாதவர்கள் என்று பொருள்படும் வகையில் பேசி கேலி செய்வான். குறிப்பாக கணக்குப் பாடத்தில் அடிக்கடி தோல்வியடையும் கணேஷ் அவனுடைய முக்கிய இலக்கு. கணக்கு பாடத்தில் அதிக முட்டை போடும் கணேஷு என்று பாட்டுப் பாடிக் கூட கிண்டல் செய்வான்.

இந்த பிரச்சனை வகுப்பாசிரியர் காதுகளுக்கு போனது. இதை எப்படி சரிசெய்யலாம் என யோசனை செய்தார். அவர் மனதில் ஒரு சிந்தனை உதித்தது. மறுநாள் காலை வகுப்புக்குள் சென்ற ஆசிரியர் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.
" இந்த வகுப்பின் மாணவர் தலைவனாக ஒருவரை தீர்மானிப்பதற்கு போட்டி ஒன்றை நடத்தப் போகிறேன். இந்த போட்டி உங்களுடைய கலைத் திறமையை சோதிக்கும் விதமாக இருக்கும். பாடல், நடனம், வரைதல், பேச்சு ஆகிய திறன்களை சோதிக்கும் வகையில் இருக்கும். யார் அதிக மதிப்பெண் அல்லது புள்ளிகள் எடுக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப் பட்டு இந்த வகுப்பறையின் மாணவர் தலைவராக செயல்படுவர்."

மாணவர்கள் அனைவரும் கலைப் போட்டிகளுக்காக தங்களை தயார் செய்ய  ஆரம்பித்தார்கள். குறிப்பிட்ட நாளில் போட்டிகள் நடைபெற்றது. பேச்சுப் பேட்டியில் மாதவனுக்கு முதலிடம். வரைதல் மற்றும் பாடலுக்கு கணேஷ் முதலிடம் பெற்றான். நளினா நடனத்தில் முதலிடம் பிடித்தாள். இரண்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த கணேஷ் வகுப்பின் மாணவர் தலைவனாக அறிவிக்கப்பட்டான்.

மாதவன் தன் இடம் இன்னொருவர் கையில் போய் விட்டதை நினைத்து வருந்தினான். அவன் கண்களில் கண்ணீர்த் துளி எட்டிப் பார்த்தது. தான் கேலி செய்ததைப் போல அவர்களும் தன்னை இனி கேலி செய்வார்களே என நினைத்து மிகவும் கலங்கினான். ஆனால் கணேஷ் மாதவனிடன் சாதாரணமாகவே பேசினான்.

அன்று மதியம் வகுப்பு ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தவுடன் கணேஷ் எழுந்து ஆசிரியரிடம்
" சார் நான் இரு போட்டிகளில் வென்றிருந்தாலும் மாதவனும் ஒரு போட்டியில் வென்றிருக்கிறான். மேலும் அவன் வகுப்பில் நடக்கும் தேர்வுகளில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுக்கிறான். எனவே மாதவன் வகுப்புக்கு மாணவர் தலைவனாக இருப்பதே சிறப்பு" எனக் கூறி அமர்ந்தான்.

இதைக் கேட்ட மாதவன் கண்களில் மீண்டு கண்ணீர். அது ஆனந்த கண்ணீர். இப்போது அவன் வாய் பேசவில்லை. கண் பேசியது. அது இனி ஒருபோதும் சக மாணவர்களை கேலி செய்ய மாட்டேன் என்றது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். ஒரு திறமையை வளர்த்துக் கொண்டு நான் தான் உலகத்திலே பெரியவன் என இறுமாப்புக் கொள்வது ஒருவரை அழிவுக்கு கொண்டுச் செல்லும்.
மவுனமாயிருக்கும் ஒருவன் "நான் இப்போது மவுனமாயிருக்கிறேன்" என்று கூறமுடியுமா? . எப்போது அவன் வாயைவிட்டு சொல் பிறந்ததோ அப்போதே அவன் மவுனம் கலைந்து விட்டது.
தான் தான் அழகு என்று ஒருவன் பறைசாற்றிக் கொள்ளும் போது அவன் அசிங்கமாகிவிடுகிறான்.
தான் தான் அறிவானவன் என தன்னைத் தானே ஒருவன் அறிவித்துக் கொள்ளும் போது அவன் அறிவில்லாதவன் ஆகிவிடுகிறான்.
எல்லாமே ஒருவகையான ஒப்பிடல் தான்.
இதை விட பெரியதுடன் ஒப்பிட்டால் இது சிறியதாகிவிடும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H