உலகின்
விலை குறைந்த ஸ்மார்ட்போன் கருவியை வழங்குவதாக தெரிவித்த ரிங்கிங் பெல்ஸ்
நிறுவனத்தின் மீது நொய்டா காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்திருக்கின்றது.பாஜக கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் கே சோமையா
அளித்தபுகாரின் பேரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் மோஹித் கோயல், தலைவர் அஷோக் சத்தா மீது ஐபிசி செக்ஷன் 420 மற்றும் சில பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கின்றது.ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போன்களை விளம்பரம் செய்து ஏமாற்றுதல், மோசடி, சிறு முதலீட்டாளர்கள், இந்திய பொது மக்களை தவறாக வழிநடுத்தவது, உள்ளிட்ட காரணங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை வைத்து தினசரி நாளிதழ்களில் விளம்பரம் செய்து முதலீடு பெற்றது, விளம்பரங்களில் இந்திய கொடியை பயன்படுத்தியதுபோன்றவைகளும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிங்கிங் பெல்ஸ் சார்ந்த குழப்பங்களை தொடர்ந்ததையடுத்து அந்நிறுவனம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.








