2. இதுவரை மக்கள் நலனில் அக்கறையில்லாமல் நம் நாட்டை ஆண்டவர்களுக்கு பாடம் புகட்ட வாக்களிக்க வேண்டும்.
3. ஒரு வேட்பாளரின் வெற்றியையோ/ தோல்வியையோ நம் ஒவ்வொரு ஓட்டும் தீர்மானிக்கிறது.
4. 18 வயது நிரம்பிய நாம் அனைவருக்கும் உள்ள ஒட்டுரிமையை , நாம் பயன்படுத்த தவறினால், அது நாம் இந்த சமுதாயத்திற்கு இழைக்கும் அநீதியாகும்.
5. இந்த வெட்ட வெயிலில் கூட்டத்தில் நின்று வாக்களிப்பதால் என்ன நடக்கப் போகிறது என்று நாம் இருந்தோம் என்றால் , உங்களின் பிள்ளைகள் படிப்பிற்க்கோ , வேலை வாய்ப்பிற்க்கோ அலைந்து திரிய நீங்களே காரணமாகிறீர்கள்.
6. உங்களுக்கு ஒரு நல்ல அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.
7. நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் தீர்மானிப்பது, செயல்படுத்துவது அரசாங்கமும், அரசியல்வாதிகள் தான் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஆதலால் அவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நமக்கு அவசியம்.
8. கள்ள ஓட்டை தடுக்க வேண்டுமா? அப்ப நம் ஓட்டை தவறாமல் செலுத்த வேண்டும், இல்லையேல் வேறொருவர் கள்ள ஒட்டாக போட்டு விடுவார்.
9. உங்கள் தொகுதியின் முன்னேற்றத்தில் உங்கள் பங்கு இருக்க வேண்டுமா வாக்களியுங்கள்.
10. நீங்கள் அடுத்த ஐந்தாண்டு நிம்மதியாக வாழ வேண்டுமா , வாக்களியுங்கள்.








