Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மாணவர்களின் தற்கொலையை தடுக்க ஆலோசனை:முறையாக நடத்தப்படாததால் அரசு நிதி வீண்:
மாணவ, மாணவியரின் தற்கொலை முயற்சிகளை தடுக்க, ஆலோசனை கூறுவதற்கான திட்டம்,
பெயரளவில் மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும், அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட
நிதியில் முறைகேடு நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில்,
கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
மதிப்பெண்களுக்கு தரும் முக்கியத்துவம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
குடும்பத்தினர்
மற்றும் நட்பு வட்டாரங்கள் என, மாணவ, மாணவியருக்கு அதிக அளவிலான மன
அழுத்தத்தை உருவாக்கிவரும் நிலையில், மதிப்பெண் குறையும் போது, அதை
எதிர்கொள்ளும் சக்தியின்றி, தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர்.தேர்வு
முடிவுகள் வெளியான, 10 நாட்களுக்குள், தற்கொலைசெய்யும் மாணவர்களின்
எண்ணிக்கை, கடந்த ஆண்டில், 30ஐ தாண்டியது. 'மன அழுத்தத்துக்கு உள்ளாகும்
மாணவர்கள் கண்டறியப்பட்டு, மாவட்டந்தோறும், 100 பேருக்கு, தேர்வுக்கு முன்,
மூன்று மாதமும், தேர்வு முடிந்து, மூன்று மாதமும் உளவியல் ஆலோசனை
வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.இதற்காக,
கடந்த பிப்ரவரி மாதத்தில், 15.04 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு
செய்யப்பட்டது. ஆனால், எந்த மாவட்டத்திலும், இதற்கான ஆலோசனை முறையாக
வழங்கப்படவில்லை. இதனால், ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடக்க
வாய்ப்புள்ளதாக சமூக நலத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து
அவர்கள் கூறியதாவது:இத்திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான
ஆட்களை தேர்வு செய்து, தற்கொலை எண்ணம், தற்கொலை முயற்சி, மனச்சோர்வு, போதை
பழக்கம் உள்ளிட்டவைகளில் இருந்து, மாணவர்களை வெளிக்கொண்டு வருவதற்கான
பயிற்சிகள் வழங்கியும், அவர்கள் ஆறு மாதம் வரை, ஆலோசனை வழங்கவும் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆனால், உண்மையில் ஆலோசனைதேவைப்படும் மாணவர்கள்
எவரும், தமக்கு ஆலோசனை வேண்டும் என, முன்வருவதில்லை.ஆலோசனை வழங்குவதாக
கண்டறிந்து, ஆலோசனைக்கு அழைத்தாலும், அவர்களது பெற்றோர் அதற்கு
ஒப்புக்கொள்வதில்லை. இதனால், மாணவ, மாணவியருக்கான உளவியல் ஆலோசனை என்பது,
'கணக்கு எழுதும் செலவினமாக' மட்டுமே உள்ளது.
இதனால், இப்பயிற்சியின்
மூலம், மாணவ, மாணவியரிடையே எவ்வித நல்ல விளைவுகளையும் ஏற்படுத்த
முடியவில்லை. தற்போது தேர்வு நடக்கும் போதே, பல மாணவ, மாணவியர் தற்கொலை
செய்து கொண்ட சம்பவமே, இதற்கு அத்தாட்சியாக உள்ளது. தேர்வு முடிவு
வெளியாகும் போதும், இதே நிலை நீடிக்கலாம். இதனால், இதற்கென ஒதுக்கப்பட்ட
நிதி, மாணவர்களை சென்றடையாமல், வேறு இடங்களை வளப்படுத்த மட்டுமே
பயன்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








