சிபிஎஸ்இ ஜேஇஇ பிரதானத் தேர்வு: ஏப்ரல் 27-ல் வெளியாகிறது முடிவுகள்!!
நாட்டிலுள்ள ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஜேஇஇ தேர்வை சிபிஎஸ்இ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இந்தத் தேர்வை 12 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.
பிரதானத் தேர்வின் முடிவுகள் வரும் 27-ம் தேதி வெளியாகவுள்ளன.
இந்தத் தேர்வு முடிவுகளை அறிய http://jeemain.nic.in/webinfo/Public/Home.aspx என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். அங்கு சென்றவுடன் 'JEE Main 2016 Results' என்ற பகுதியில் கிளிக் செய்யவேண்டும்.
பின்னர் உங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றைக் கொடுத்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.முடிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொண்டு எதிர்காலத்துக்குப் பயன்படுத்தலாம்.
பிரதானத் தேர்வு கடந்த 3-ம் தேதி ஆஃப்-லைனில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆன்-லைன் தேர்வு ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற்றது.








