தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் மே மாதம் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22 -ம் தேதி தொடங்கி 29ம்தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனு பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது.
வேட்பு மனுவை திரும்ப பெற இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. மே மாதம் 16-ம் தேதி வாக்குபதிவும், 19 ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.








