'பேங்க் ஆப் இந்தியா' வங்கி பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி:


மத்திய
அரசின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா
வங்கியில் 517 கடன் அதிகாரி, மேலாளர், முதுநிலை மேலாளர் ஆகிய
பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி தினமாகும்.
பணி:கடன் அதிகாரி (Manager-Credit) - 217
பணி:மேலாளர் - 200
பணி:முதுநிலை மேலாளர் 100தகுதி:60
சதவீத மதிப்பெண்களுடன் பிகாம், எம்பிஏ அல்லது வங்கி மேலாண்மையில் முதுநிலை
டிப்ளமா அல்லது வங்கி நிர்வாகத்தில் முதுநிலை டிப்ளமா அல்லது சிஏ அல்லது
ஐசிடபிள்யூஏ முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்:மேலாளர் பணிக்கு 5 ஆண்டுகளும், முதுநிலை மேலாளர் பணிக்கு 8 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது
வரம்பு:கடன் அதிகாரி பணிக்கு 21 - 30-க்குள்ளும், மேலாளர் பணிக்கு 28 -
35-க்குள்ளும், முதுநிலை மேலாளர் பணிக்கு 30 - 38-க்குள்ளும் இருக்க
வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத்தேர்வு மற்றும்
நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு ஆன்லைனில் நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:14.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.bankofindia.co.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.







