Medicinal Benefits of Banana Stem |Kalvikural.com - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Medicinal Benefits of Banana Stem |Kalvikural.com

வாழைத்தண்டின்மருத்துவப் பயன்கள்:

வாழைத்தண்டு அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து கொண்டவை. இதில் சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். உடல் பருமனைக் குறைக்கும்.
பெண்களின் மாவிடாய் கோளாறு மற்றும் ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.
வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி கொண்டது என்பதால் அதை உண்ணும் நாட்களில் தயிர், மோரை தவிர்க்கவும். வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்
நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2.தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3.தொண்டை கரகரப்பு:
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4.தொடர் விக்கல்:
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5.வாய் நாற்றம்:
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
6.உதட்டு வெடிப்பு:
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
7.அஜீரணம்:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
8.குடல்புண்:
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
9.வாயு தொல்லை:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
10.வயிற்று வலி:
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
11.மலச்சிக்கல்:
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
12.சீதபேதி:
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
13.பித்த வெடிப்பு:
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
14.மூச்சுப்பிடிப்பு:
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

15.சரும நோய்:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

16.தேமல்:
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

17.மூலம்:
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

18.தீப்புண்:
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

19.மூக்கடைப்பு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

20.வரட்டு இருமல்:
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.



சளி, இருமல் நீங்க…

சளி, இருமல் போன்ற சாதாரண உபாதைகளுக்கு நாட்டு வைத்தியமே சிறந்தது. கை மருத்துவம் நம் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

சளி தொல்லை ஏற்படுவதற்கான காரணம்…

நம் உடலில் அதிக படியான சூட்டை தடுக்கவும், தேவையற்ற நச்சு பொருட்களை வெளியேற்றவும் உடல் தனது தேவைக்காக சளி எனும் நீர் மூலக திரட்சி…

மேலும் அது இயல்பாக வெளியேறும் போது நன்மையானதே. ஆனால் இயல்பாக வெளியேறும் வழிகள் தடுக்கபட்டால் இருமல் தும்மல், ஈளை, இளைப்பு என பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது.

சளி நீங்க நம் முன்னோர்கள் சொல்லி சென்ற வழிகளில் இயற்கையாக மிக எளிமையாக, சுகமாக அனைத்து நோய்களிலிருந்து விடுபடலாம்.

எளிமையான பாட்டி வைத்தியம்…

திப்பிலி, அக்கரா, சுக்கு, மிளகு, மஞ்சள் இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் காலை அல்லது இரவில் அரை டீஸ்பூன் எடுத்து அதை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும். வென்னீரிலும் கலந்து சாப்பிடலாம்.

பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு share செய்யுங்கள்…

———————————

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி…..

கண்டிப்பாக படித்தபின் நண்பர்களுக்கும் பகிரவும்

இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.

. தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.

. ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.

. நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.

. ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாகற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது.

. அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும், நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.

.நெல்லிக்காயின் சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும், குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும்.

இவ்வாறான வழிகளில் நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், மரணத்தை கூட தள்ளிப்போடலாம்…..

 ————————————

சுக்கு – சில மருத்துவ குணங்கள்:-

 1. ஒரு துண்டு சுக்கைத் தோல் நீக்கிக் கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பால், சர்க்கரைச் சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர வாயு அகலும் பசியுண்டாகும். தலை நோய், சீதளம், வாத குன்மம், விலாக்குத்து, வயிற்றுக்குத்து, நீர்ப்பீனிசம், நீர் ஏற்றம், நீர்க்கோவை, கீல் பிடிப்பு, ஆசன நோய், பல்வலி, காதுக் குத்தல், சுவாச ரோகம் தீரும்.

2. சுக்கு 10 கிராம், மிளகு 6, சீரகம் 35, பூண்டுப்பல் 3, ஓமம் 10, உப்பு 4 கல் ஓட்டில் வறுத்து 5 கிராம் வேப்பங்கொழுந்துடன் நைய அரைத்து 50 மி.லி. வெந்நீரில் கலந்து வடிகட்டிக் குழந்தைகளுக்கு அரைச் சங்கு தாய்ப்பால் கலந்து 2 முதல் 4 வேளை கொடுக்க வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

3. சுக்கு, கடுக்காய்ப்பிஞ்சு, சூரத்து ஆவாரை வகைக்கு 10 கிராம் அரை லிட்டர் நீரில் இட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி, 10 கிராம் பேதி உப்பு கலந்து சாப்பிட ஆயாசமின்றி பேதியாகும். மோர் சாப்பிடப் பேதி நின்று விடும்.

4. சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தோல், இந்துப்பு சமனளவு பொடி செய்து பற்பொடியாகப் பயன்படுத்தலாம். பல் ஆட்டம், பல் சொத்தை, இரத்தக் கசிவு தீரும்.
எளிய இயற்கை வைத்தியம்:-
கட்டிகள் உடைய
மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.
பேன் தொல்லை நீங்க
வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.
மேனி பளபளப்பு பெற
ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.
கரும்புள்ளி மறைய
எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
தொண்டை கரகரப்பு நீங்க
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
கருத்தரிக்க உதவும்
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 – 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
இருமல் சளி குணமாக
சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H