இது குறித்து, ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்க
செயலர் தர்மராஜ் கூறியதாவது: பிற நகரங்களில், வங்கிகள் மூலம்
ஆர்.டி.ஜி.எஸ்., (ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்) முறையில், லண்டனில்
இருந்து தங்கத்தை மொத்தமாக இறக்குமதி செய்கின்றனர்.
தங்கம் வாங்கும் வியாபாரிக்காக, அவர் சார்ந்த வங்கி, தங்கத்தின் விலைக்கான
உத்தரவாதத்தை வழங்கி இறக்குமதி செய்கிறது. இதனால், வங்கி கமிஷன், வரி
போன்றவற்றால், அவர்களது விலை உயர்ந்து காணப்படுகிறது.
ஆனால், ஈரோடு போன்ற ஊர்களில், 90 சதவீதம் உள்ளூர் மக்கள் தான் நகை வாங்க
வருகின்றனர். தரம் இல்லையேல், மறுமுறை வர மாட்டார்கள். விற்பனைக்காகவும்,
தரத்தை தொடரவும், அதே சமயம் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், எங்கள்
தரப்பில் சில யுக்திகளை மேற்கொண்டோம்.
'ஆன்லைன்' மற்றும் மொத்த வியாபாரிகளிடம் நேரடி கொள்முதல், ரெடிமேட் நகைகளை
தரத்தின் அடிப்படையில் வாங்கினோம். இதனால், இங்கு குறைவான விலைக்கு விற்க
முடிகிறது.
சவரனுக்கு ரூ.740 குறைவு: கடந்த, 22ம் தேதி சேலத்தில், 22 காரட் தங்கம், 1
கிராம், 2,838 ரூபாய்க்கும்; 1 சவரன், 22,700 ரூபாய்க்கும் விற்பனையானது.
ஈரோட்டில், 1 கிராம், 2,745 ரூபாய்க்கும்; 1 சவரன், 21,960 ரூபாய்க்கும்
விற்பனையானது. சேலத்தை விட ஈரோட்டில் சவரனுக்கு, 740 ரூபாய் குறைவு.
இதே நிலை, சில ஆண்டுகளாக தொடர்கிறது. இதனால், பல பகுதிகளில் இருந்தும்,
ஈரோட்டுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.