தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜூன் 20) வெளியிடப்படுகிறது.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதன் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 13 பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 12-ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
கடைசி நாளான ஜூன் 11-ஆம் தேதி வரை சுமார் 36 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதையடுத்து கடந்த சில நாள்களாக தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துணைவேந்தர் கு.ராமசாமி இப்பட்டியலை வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட உள்ளது.