2016–17–ம் கல்வியாண்டிற்கான பாடநூல்களை பள்ளிகள்மொத்தமாக தமிழ்நாடு
பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து
வினியோகிக்கின்றன.
மாணவர்களும்
தமக்கு தேவைப்படும் 2016–17–ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 12–ம்
வகுப்புவரையிலான பாடநூல்களை www.textbookcorp.inஎன்ற இணையதளம் மூலம்
பதிவுசெய்து பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இது
தவிர பாடநூல்களை எளிதில் வாங்கிடும் வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து
வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள 269 இ–சேவை மையங்களிலும் தேவைப்படும்
பாடநூல்களுக்கான தொகையை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். மேற்படி
பாடநூல்கள் 48 மணி நேரத்துக்குள் அவர்களது இல்லத்திற்கு கூரியர் சேவை மூலம்
வந்துசேரும்.இ–சேவை மையங்களின் விலாச விவரங்கள் www.textbookcorp.in என்ற
இணையதளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். இணையத்தளத்தின் மூலமாக பாடநூல்
விலை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.இந்த தகவல் தமிழ்நாடு பாடநூல்
மற்றும் கல்வியியல் பணிகள் கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







