ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அச்சாணியாகத் திகழக்கூடிய ஆசிரியர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான திறமையோடு கற்பித்தலை புதுமையாகவும் இனிமையாகவும் ஆற்றிவரும் சூழலில் ஒருவரிடத்தில் இருக்கக்கூடிய புதுமையும் , கற்பித்தல் நுட்பமும் , புதிய புதிய உத்திகளும் தமிழகப் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஒவ்வொருவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்... அதன்மூலம் தமிழகத்தின் கல்வித்தரத்தை முன்னோக்கிய பாதையில் கொண்டு செல்ல எத்தனிக்கும் அரசோடு நாமும் பெரும்பங்காற்ற வேண்டும் என்னும் எண்ணத்துடன் ஊடகங்கள் கொண்டாடும் கல்வித்துறையின் சாதனையாளர்களும், அதனையும் விஞ்சி சப்தமே இல்லாமல் சாதித்துக் கொண்டு இருப்போரும் ஒன்று சேர்ந்து, எங்கோ ஒரு மூலையில் ஒருவர் சாதிக்கும்பொழுது ஏன் ஒவ்வொரு நபராலும் முடியாது என சிந்தித்ததன் விளைவுதான் கல்வியாளர்கள் சங்கமம்
இதன் மூலம் ஆசிரியர்களின் அறிவுப்பகிர்வையும், அனுபவப் பகிர்வையும் ஒருங்கிணைத்து தங்களது விடுமுறைக்காலத்தையும் வீணாக்காமல் ஒன்று சேர்ந்து பயிலரங்குகள் மூலம் ஆசிரியர்களின் கற்றலை தொடர்ந்திடச் செய்து கற்பித்தலை தொழில்நுட்பத்தாலும், புதிய உத்திகளினாலும் செம்மைப் படுத்திட காரைக்குடியில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் ஜீலை 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநில அளவிலான பயிலரங்கு புதியதொரு முன்னெடுப்பை தொடங்கியுள்ளது ...
இவ்விழாவின் முதல்நாளில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர்.கோ.மீனா , தி இந்து நாளிதழின்
சிறப்புச் செய்தியாளர்
c. ஜெய்சங்கர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கத்தின் உதவிப் பேராசிரியர் திரு.ஆசிர் ஜூலியஸ், புதியதலைமுறைக் கல்வி இதழின் தலைமை உதவி ஆசிரியர் திரு.மோ.கணேசன், சிறார் எழுத்தாளர் திரு.விஷ்ணுபுரம் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
பயிலரங்கின் இரண்டாம் நாளில் தந்தி தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் திரு.ரங்கராஜ் பாண்டே , புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர்.செல்லத்துரை, சிவகங்கை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர். திருஞானசம்பந்தம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இவர்களுடன் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை எனப் பல்வகைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 200 நபர்களின் இரண்டு நாள் அமர்வுடன் பயிலரங்கு நடைபெற உள்ளது.
மேலும் இச்சிறப்புமிகு பயிலரங்கில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தக அரங்கும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புத்தக அரங்கும் அமைக்கப்பட உள்ளது.
இது தொடர்ந்து தமிழகம் முழுவதும் மண்டல அளவிலும், மாநில அளவிலும் விடுமுறைக் காலங்களில் நடைபெற உள்ளது.
✍✏பதிவு: 'சிகரம்' சதீஸ்
9994119002
🎤📢 பகிர்வு: 'அண்ணாச்சி' அ.கிருஷ்ணமூர்த்தி