மருத்துவ நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய தீர்மானம்: ஸ்டாலின் வலியுறுத்தல:
மருத்துவ நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
வலியுறுத்தி உள்ளார்.
தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், அவசர சட்டத்தின் மூலம் இந்த
ஆண்டிற்கான மருத்துவ நுழைவுத் தேர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில்,
கிராமப்புற மாணவர்களின் கல்விக்கனவை சிதைக்ககூடியது நுழைவுத்தேர்வு என
ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்கங்களால் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் நிலை
நிறுத்தப்பட்டுள்ள சமூகநீதிக்கு சிறிதளவும் பாதிப்பு வராத வகையில் மருத்துவ
கல்விக்கான நுழைவுத் தேர்வை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசை
வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் ஸ்டாலின்
கூறியுள்ளார்.







