சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது தொடர்பாக அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில், "சரோஜினி தாமோதரன் கல்வி அறக்கட்டளை அரசுசாராத அமைப்பாகும்.இது கடந்த 1999-ல் குமாரி சிபுலால் மற்றும் எஸ்.டி.சிபுலால் (இன்போசிஸ் இணை நிறுவனர் - முன்னாள், ஆகியோரால் நிறுவப்பட்டது.சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையின் சார்பாக வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற
தமிழ்நாட்டில் உள்ள 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயில இருக்கும்
மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த கல்வி உதவித்தொகையைப் பெற மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு 2
லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். முந்தைய வருட பத்தாம் வகுப்பு
தேர்வில் 90% மதிப்பெண் அல்லது A+ தரம் பெற்றிருக்க வேண்டும். ஊனமுற்ற
மாணவர்கள் 75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுடைய மாணவர்கள் ஜூன் 6 2016 முதல் ஜூலை 31 வரை www.vidyadhan.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
மேலும் விவரங்களுக்கு vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்ற
மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: +91 9739512822, +91
7339659929" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.