வேளாண் பல்கலையில் கலந்தாய்வு.
வேளாண் பல்கலையில் நடந்த, நான்காம் நாள் கலந்தாய்வில், 432
இடங்கள் நிரப்பப்பட்டன. கோவை, தமிழ்நாடுவேளாண் பல்கலையில், பொதுப்பிரிவு,
நான்காம் நாள் கலந்தாய்வுநேற்று நடந்தது; 1,154 பேர் அழைக்கப்பட்டதில், 439
பேர் பங்கேற்ற நிலையில், 432 பேர், விருப்பமான பாடங்களை தேர்வு செய்தனர்.
மாணவர் சேர்க்கை குழு தலைவர் மகிமைராஜா கூறுகையில், ''வேளாண்
பல்கலை மற்றும் இதன் கீழ் இயங்கும் அரசு கல்லுாரிகளில்,தற்போது பி.எஸ்சி.,
அக்ரி படிப்பு, ஓ.சி., / பி.சி., வகுப்பு மாணவர்களுக்கான இடம்முடிந்தது.
எனவே, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளிலுள்ள படிப்புகளை,மாணவர்கள் பரவலாக
தேர்ந்தெடுத்து வருகின்றனர்,'' என்றார்.