ஜியோவில் பேலன்ஸ், டேட்டா யூசேஜ், நம்பர் ஆகியவைகளை செக் செய்வதெப்படி.?
மெயின் பேலன்ஸ்
உங்கள் மெயின் பேலன்ஸை செக் செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று *333# என்ற
எண்ணிற்கு டயல் செய்து தெரிந்த்துக்கொள்ளலாம், மற்றொன்று 55333 என்ற இலவச
எண்ணிற்கு MBAL என்று மெசேஜ் அனுப்பி தெரிந்துக்கொள்ளலாம்.
ப்ரீபெயிட் பேலன்ஸ் மற்றும் வேலிடிட்டி
நீங்கள் 199 என்ற எண்ணிற்கு BAL என்று டைப் செய்து ஒரு எஸ்எம்எஸ்
அனுப்புதின் மூலம் ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரீபெயிட் பேலன்ஸ் மற்றும்
வேலிடிட்டி ஆகிய தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும்.
நீங்கள் சபஸ்க்ரைப் செய்துள்ள திட்டம்
நீங்கள் எந்த கட்டண திட்டத்தில் சேர்ந்துள்ளீர்கள் என்று தெளிவில்லாமல்
இருந்தால், நீங்கள் உண்மையில் எந்த திட்டத்தில் சேர்ந்துள்ளீர்கள் என்பதை
அறிய 199 என்ற எண்ணிற்கு MY PLAN என்று டைப் செய்து ஒரு எஸ்எம்எஸ்
அனுப்பவும்.
உங்கள் ஜியோ நம்பர்
*1# என்ற எண்ணை டயல் செய்வதின் மூலம் நீங்கள் உங்களின் ஜியோ நம்பரை அறிந்துக்கொள்ள முடியும்.
ஜி தரவு பயன்பாடு
டேட்டா யூசேஜ் பற்றிய தகவலை பெற ரிலையன்ஸ் ஜியோவில் பிரத்யேக வழி ஏதுமில்லை
ஆக செட்டிங்ஸ் சென்று உங்கள் டேட்டா யூசேஜ்தனை பரிசோதித்துக் கொள்ளலாம்
அல்லது உங்கள் ஸ்மார்ட் போனிற்கு டேட்டா லிமிட் செட் செய்து எல்லை
மீறப்பட்டதும் டேட்டா டிஷ்கனெக்ட் செய்து கொள்ளவும் செய்யலாம்







