முடி உதிர்வுக்கு குட்பை... அசத்தல் நெல்லிக்காய்!

நெல்லிக்காய் என்றதும் நம் நினைவுக்குவருவது அதன் சுவையும், கண்ணைக் கவரும்
பச்சை நிறமும்தான். ஆனால் சுவையையும் தாண்டி அதில் இருக்கும் சத்துகள்
அநேகம்.
அதனால்தான் ஔவை முதல் சித்தர்கள் வரை அதைக்
கொண்டாடினார்கள். நெல்லிக்காயின் மருத்துவப் பயன்களை விளக்குகிறார் சித்த
மருத்துவர் சோ.வித்யா.
ஆப்பிள் பழம் ஒன்றில் உள்ள சத்துகளைவிட நெல்லிக்காயில் நிறைந்திருக்கும்
சத்துகள் அநேகம். வைட்டமின் சி-யின் இருப்பிடமே நெல்லிக்கனிதான். வேறு
எந்தக் காய்கறிகள்,
பழங்களிலும் இல்லாத அளவுக்கு வைட்டமின் சி இதில் நிறைந்துள்ளது. மேலும்
வைட்டமின் ஏ மற்றும் பி ஆகியவையும் நிறைந்துள்ளன. கால்சியம் 50 மி.கி.,
பாஸ்பரஸ் 20 மி.கி., இரும்புச்சத்து 1.2 மி.கி என சத்துகளின் களஞ்சியமாக
இருக்கிறது நெல்லிக்கனி.