ரெட் பஸ் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது: ஆம்னி பஸ் உரிமையாளர்கள்
மேலும் ஆம்னி பஸ்சில் பயணம் செய்ய விரும்பு பயணிகள்,அந்தந்த நிறுவனங்களின் இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிட்டால் ஆம்னி பஸ் நிறுவன அலுவலகங்களை அணுகி நேரடியாக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
ஜனவரி 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ரெட் பஸ் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள்,அதனை கேன்சல் செய்து டிக்கெட் கட்டணத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.









