4,362 காலியிடங்களை நிரப்ப... அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது.140 பேர் வரவில்லை: இதையடுத்து எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில் பெற்ற மதிப்பெண் கூட்டுத்தொகை அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 22 மாவட்டங்களில் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு 2,558 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 2,418 பேர் பங்கேற்றனர். வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றது உள்ளிட்ட சில காரணங்களால் 140 பேர் வரவில்லை.
இதையடுத்து கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவள்ளூர், விருதுநகர், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெறும்.
வேலூர், கிருஷ்ணகிரி...மாவட்டங்களில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும். அதையடுத்து இரு மாவட்டங்களைச் சேர்ந்த கலந்தாய்வு புதன்கிழமை (ஏப்.19) நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.








