இது தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி டீக்கராமன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
மேலும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், உள்ளாட்சி தேர்தலை மே 14க்குள் நடத்த வேண்டும் என டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், என வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை ஏற்க முடியாது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் மீண்டும் புதிய புதிய பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது கேலிக்கூத்தாகவும், நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாகவும் உள்ளது. மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துக் கொண்டே இருக்க முடியாது.ஏற்கனவே மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும்’ என எச்சரித்தனர்.
மேலும் மே 14க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம். அதை விட்டுவிட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதை ஏற்க முடியாது என்று உத்தரவிட்டு விசாரணையை 1 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.








