நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடக்கிறது: தமிழகத்தில் 88 ஆயிரம் பேர் பங்கேற்பு - ஜூன் 8-ம் தேதி முடிவு வெளியீடு.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் 88
ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 11.35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு
எழுதுகின்றனர்.நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்
நிலை பல்கலைக்கழகங்களில் சுமார் 56 ஆயிரம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்
உள்ளன.
இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) நாடு முழுவதும் இன்று நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 9 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் மொத்தம் 2,200 மையங்களில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 11.35 லட்சத்துக் கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, ஒடியா ஆகிய 10 மொழிகளில் தேர்வு நடக்கிறது.இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியலில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என, மொத்த மதிப்பெண் 720. ஒவ்வொரு கேள்விக்கும், கொடுக்கப்பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந் தெடுத்து குறிக்க வேண்டும். தவறான பதில்களுக்கு தலா 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
தேர்வு முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.தேர்வு இன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக் கும். காலை 7.30 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையத்துக் குள் அனுமதிக்கப்படுவார்கள். 9.45 மணி வரை அனுமதி அட்டை(ஹால்டிக்கெட்) சோதனை செய்யப்படும். 9.30 மணிக்கு மேல் யாரும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.தேர்வுக்கூட அனுமதி அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அனுமதி அட்டையின் 2-வது பக்கத்தில் ஒட்டவேண்டிய தபால் தலை அளவு புகைப்படம் ஆகியவற்றை மட்டுமே மாண வர்கள் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல வேண்டும். நீலம் அல்லது கருப்பு நிற பால்பாயின்ட் பேனா மூலமே தேர்வு எழுத வேண்டும். தேர்வுக் கூடத்திலேயே பேனா வழங்கப்படும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் நிபந்தனைகள்
நீட் தேர்வு எழுத வருபவர்கள் அரைக்கை சட்டை, செருப்பு, பேன்ட், ஜீன்ஸ் பேன்ட், மருத் துவர்கள் பரிந்துரைத்த கண்கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், சிறிய அளவு ரப்பர்பேண்ட் அணிந்துவர அனுமதி உண்டு. திருமணமான பெண்கள் தாலி, வளையல்அணியலாம்.ஷூ, முழுக்கை சட்டை, டி-ஷர்ட், பெல்ட், கைக்கடிகாரம், கூலிங்கிளாஸ், செயின், மோதி ரம், பிரேஸ்லெட், நெக்லஸ், ஆபரணங்கள், க்ளிப், பெரிய அளவு பட்டன்கள், பேட்ஜ், பெரிய அளவு ரப்பர்பேண்ட், சேலை, வளையல், பர்தா, தொப்பி, பைஜாமா, குர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன், கைப்பை,கால்குலேட்டர், கேமரா, பென்டிரைவ், ஹெட்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட் களை தேர்வு அறைக்குள் கொண்டுசெல்லக் கூடாது. முறை கேடுகளில் ஈடுபட்டால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.