ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர்கள்!
அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..?
நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒரே மதிப்பெண் பெற்று
அசத்திய திருநெல்வேலி இரட்டையர்களுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம்
உள்ளன.நெல்லை மாவட்டம், வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்
பள்ளியின் இரட்டையர்கள் ஜோனிகா வளன், ஜோஷிகா வளன் இருவரும் ஒரே மதிப்பெண்
பெற்று அசத்தியுள்ளனர். உருவ அமைப்பில் மட்டும் ஒற்றுமையை வெளிப்படுத்தாது
பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றும் தங்கள் ஒற்றுமையை
வெளிப்படுத்தியுள்ளனர்.









