உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது உடல் மட்டுமல்லாது மனமும் வலிமை அடைகிறது. உடலும், மனமும் ஒருமுகமாவதற்கு உடற்பயிற்சி உதவுகிறது.
👉 சோர்வு போன்றவற்றை முறித்து புத்துணர்வு பெற உடற்பயிற்சி அவசியமாகும்.
👉 உடற்பயிற்சி உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்ல, உடலில் நோய்களே வராமல் தடுப்பதற்கான ஒரு பயிற்சியாகும்.
உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :
👉 உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு உடற்பயிற்சிதான்.👉 சோர்வு போன்றவற்றை முறித்து புத்துணர்வு பெற உடற்பயிற்சி அவசியமாகும்.
👉 உடற்பயிற்சி உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்ல, உடலில் நோய்களே வராமல் தடுப்பதற்கான ஒரு பயிற்சியாகும்.
உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :
👉 உடற்பயிற்சி செய்வதன் மூலமாக கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெறலாம்.
👉 உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும்.
👉 நிம்மதியான தூக்கம் வரும். உடற்பயிற்சி செய்வது எந்தப் பக்கவிளைவையும் தராது.
👉 தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும் என்கிறது ஆராய்ச்சி.
👉 உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் சோர்வு குறைவதினால் நாம் தினசரி செய்யும் வேளைகளில் அதிகளவில் ஈடுபட முடியும். அதனால் நமது உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது.
👉 வாரத்திற்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
👉 ரத்த ஓட்டம் சீராகும், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
👉 தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது, உடலில் கொழுப்பு சேர்வதில்லை.
👉 உடற்பயிற்சி செய்வது நமது வாழ்நாள் அதிகரிக்க உதவுகிறது. உடலும், மனமும் வலுப்பெறுவதினால் நமது வாழ்நாள் தானாகவே அதிகரிக்கிறது.
👉 அதிகாலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் உள்ளவர்களுக்கு, அதிகாலையில் எழும் பழக்கமும் ஏற்படுகிறது. முதுகு வலி உள்ளவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.
👉 காலை வேளையில் சுத்தமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. உடற்பயிற்சியால் உள்ளுக்குள் செல்லும் பிராணவாயுவின் அளவு அதிகரிக்கிறது.







