இந்நிலையில் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய 21.10.2016 அன்று ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளையும் பரிசீலித்து வல்லுநர் குழு அறிக்கை தயாரிக்க இருந்த நிலையில் சாந்தா ஷீலா நாயர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் தமிழ்நாடு அரசு அமைத்த வல்லுநர் குழு தனது பணியினை தொடர்ந்து விரைவாக அறிக்கை சமர்பிக்க ஏதுவாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.தர் வல்லுநர் குழுவின் தலைவராக தமிழக அரசு நியமித்து 3ம் தேதி (நேற்று) உத்தரவிட்டுள்ளது. இந்த குழு, அரசு அலுவலர்களின் ஓய்வூதியம் குறித்த அறிக்கையை வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.