முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே
மருத்துவக் குணங்கள் கொண்டவை.முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை
சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் சிறந்ததாம்
.சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு
இல்லை.
முன்பெல்லாம் சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச்
சொல்லி வந்தார்கள் உணவு ஆய்வாளர்கள்.ஆனால் இப்போது முருங்கையை
புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக்
கீரையில் உள்ளது. ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில்
வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான
சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி,
முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது .மேலும் அவை
நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும்,
ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் 'சி'
கிடைக்கிறது.வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும்,
கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் "ஏ "வும், பாலில்
உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.
மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.