மதிப்பெண் : இந்நிலையில், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தங்களின் மதிப்பெண்ணையும், விடைத்தாளையும் ஆய்வு செய்ய, விடைத்தாள் நகல் வழங்கப்படுகிறது.கூட்டலில் பிழை இருக்குமோ என்ற, சந்தேகம் இருந்தால், மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 1ல் துவங்கியது; மறுநாளும் பதிவு நடந்தது. விடைத்தாள் நகல் பெற, இன்று வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள், அவரவர் பள்ளியில், எந்த பாடத்துக்கு மறுகூட்டல் தேவை, எந்த பாடத்துக்கு விடைத்தாள் நகல் தேவை என, தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.மொழி பாடம் ஒன்றுக்கு, தலா, 550 ரூபாய்; முக்கிய பாடங்களுக்கு, தலா, 275 ரூபாய், கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மறுகூட்டல் வேண்டுமா, மறுமதிப்பீடு வேண்டுமா என, முடிவு செய்யும் முன், விடைத்தாள் நகலை பெற்று, அதை பார்த்து முடிவு செய்து
கொள்ளலாம்.ஆன்லைன்விண்ணப்பிப்பவர்களுக்கு, சில நாட்களில் ஆன்லைனில் விடைத்தாள் நகலை, தேர்வுத்துறை வழங்கும். பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும்.








