ஈரோடு: ''அரசாணையை எரித்தது தவறு என்ற ரீதியில், '17 பி' சார்ஜ்
வழங்கப்பட்டுள்ள, 1,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது, சட்டப்படி
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.ஈரோட்டில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கேட்டையன்,
நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், எங்கெங்கு ஆசிரியர் பற்றாக்குறை
உள்ளதோ, அங்கு பெற்றோர் - ஆசிரியர் சங்கம் மூலம், அந்தந்த பகுதி,
எம்.எல்.ஏ., - அமைச்சர்கள் உதவியுடன், 7,500 ஆசிரியர்களை நியமிக்க
உத்தரவிட்டுள்ளோம். 'டெட்' தேர்வு எழுதி பாஸ் செய்த, அந்தந்த பகுதியில்
உள்ளவர்களும், பணி அமர்த்த வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில், கூடுதலாக,
6,500 பேருக்கு மேல் உள்ளனர். அவர்களுக்கும், பணி வழங்கப்படும். வட
மாவட்டங்களில், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.ஆசிரியர்
நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி, மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒருவர்
வழக்கு தொடுத்துள்ளார்.அவர் ஆசிரியரும் அல்ல; பெற்றோரும் அல்ல. அவர் கூறி
உள்ள குற்றச்சாட்டுக்கு, அரசு உரிய பதில் தெரிவித்துஉள்ளது.
புதிய
திட்டத்தில், 15 குழந்தைகளுக்கு கீழ் உள்ள பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதி
தராது என தெரிவித்துள்ளது. ஆனால், மாநில அரசுக்கு எந்த பள்ளியையும் மூடும்
எண்ணம் இல்லை.அரசாணையை எரித்ததால், 1,000த்துக்கும் மேற்பட்ட
ஆசிரியர்களுக்கு, '17 பி' சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது.பள்ளி ஆசிரியர்களே
அரசாணையை எரிப்பது எப்படி ஏற்புடையது. சட்ட ஆணையை கிழித்ததற்கே,
சட்டசபையில், அன்பழகன் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்கள் பதவி இழந்தனர். அரசாணை,
அரசியலமைப்பு சட்டம் என எதுவாக இருந்தாலும், அதை எரித்தால், அவர்கள் மீது
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்காக, அவர்களிடம் விளக்கம்
கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
அரசாணையை எரித்த ஆசிரியர்கள் நடவடிக்கை உறுதி: செங்கோட்டையன்:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |