_திருவள்ளுவர் ஆண்டு 2050_* *_பங்குனி 13_* *_27.03.2019_* *_புதன்கிழமை_* *_வரலாற்றில் இன்று: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


_திருவள்ளுவர் ஆண்டு 2050_* *_பங்குனி 13_* *_27.03.2019_* *_புதன்கிழமை_* *_வரலாற்றில் இன்று:


1309 – திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு வெனிசு நகரத்தில் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கி தடை விதித்தார்.

1513 – நாடுகாண் பயணி யுவான் பொன்ஸ் டி லெயோன் புளோரிடாவிற்கு செல்லும் வழியில் பகாமாசின் வடக்கு முனையைச் சென்றடைந்தார்.



1625 – முதலாம் சார்லசு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லாந்து மன்னராக முடி சூடியதுடன், பிரான்சு மன்னனாகவும் தன்னை அறிவித்தார்.

1794 – அமெரிக்க அரசு நிரந்தரமான கடற்படையை அமைத்தது.

1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: மத்திய அலபாமாவில், அமெரிக்கப் படைகள் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் கிரீக்குகளைத் தோற்கடித்தனர்.

1836 – டெக்சாசில் மெக்சிக்கோ இராணுவத்தினர் 342 டெக்சாசு போர்க்கைதிகளைக் கொன்றனர்.

1866 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆண்ட்ரூ ஜோன்சன் குடிசார் உரிமைகள் சட்டத்துக்கு தனது வீட்டோ உரிமை மூலம் தடை விதித்தார். ஆனாலும் அவரது வீட்டோவை அமெரிக்க சட்டமன்றம் நீக்கி சட்டமூலத்தை ஏப்ரல் 9 இல் நடைமுறைப்படுத்தியது.

1886 – அப்பாச்சி (பழங்குடிகள்) போர்வீரர் யெரொனீமோ அமெரிக்க இராணுவத்திடம் சரணடைந்தார். அப்பாச்சி போர்கள் முடிவுக்கு வந்தது.

1890 – கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் உயிரிழந்தனர்.

1899 – பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: எமிலியோ அகுயினால்டோ மரிலாவோ ஆற்றில் நடந்த சமரில் பிலிப்பீனியப் படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டார்.

1915 – குடற்காய்ச்சல் நோய்க்கிருமிகள் தொற்றிய டைஃபாய்டு மேரி என்பவர் அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டார். இவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவில் அச்சு அணி ஆதரவு அரசாங்கம் யுகோசுலாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: அலூசியன் தீவுகளில் அமெரிக்கக் கடற்படைக்கும் சப்பானுக்கும் இடையே சமர் ஆரம்பமானது.

1958 – நிக்கிட்டா குருஷேவ் சோவியத் தலைமை அமைச்சரானார்.

1964 – வட அமெரிக்காவின் வரலாற்றில் அதி ஆற்றல் வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் உயிரிழந்தனர். ஏங்கரெஜ் நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.

1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் வானூர்தி விபத்தொன்றில் உயிரிழந்தார்.

1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

1970 – கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.

1977 – அமெரிக்காவின் இரண்டு போயிங் 747 பயணிகள் விமானங்கள் கேனரி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் உயிரிழந்தனர். 61 பேர் மீட்கப்பட்டனர்.

1980 – நோர்வேயின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் உயிரிழந்தனர்.

1981 – போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 12 மில்லியன் தொழிலாளர்கள் 4 மணி நேர பணி நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

1986 – ஆத்திரேலியா, மெல்பேர்ண் நகரில் காவல்துறை தலைமையகத்தின் முன்னால் வாகனக் குண்டு வெடித்ததில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டு, 21 பேர் காயமடைந்தனர்.

1990 – அமெரிக்கா கியூபாவிற்கு காஸ்ட்ரோவிற்கு எதிரான வானொலி பிரச்சார சேவையை ஆரம்பித்தது.

1993 – யான் சமீன் சீனாவின் அரசுத்தலைவரானார்.

1998 – அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆண்களின் விறைக்க முடியாமைக்கான சிகிச்சைக்காக வயாகராவை அனுமதித்தது.

1999 – அமெரிக்க லொக்கீட் எப்-117 நைட்கோக் விமானத்தை யுகோசுலாவியா சாம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது.

2002 – இசுரேல், நத்தானியாவில் பாலத்தீனர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

2002 – பிரான்சு, நான்டேர் நகரில் நடைபெற்ற நகரசபை கூட்டம் ஒன்றை நோக்கி துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில், எட்டு நகரசபி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர், 19 பேர் காயமடைந்தனர்.

2009 – இந்தோனேசியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.

2014 – பிலிப்பீன்சு அரசு மோரோ இசுலாமிய விடுதலை முன்னணிப் போராளிகளுடன் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தியது.

2016 – லாகூர், குல்சன்-இ-இக்பால் பூங்காவில் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டத்தின் போது, தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 70 பேர் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்தனர்.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                *பிறப்புகள்*


•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

347 – ஜெரோம், உரோமை ஆயர், இறையியலாளர், மொழிபெயர்ப்பாளர் (இ. 420)

1845 – வில்லெம் ரோண்ட்கன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1923)

1847 – ஓட்டோ வாலெக், நோபல் பரிசு பெற்ற யூத-செருமானிய வேதியியலாளர் (இ. 1931)

1886 – லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, செருமானிய-அமெரிகக் கட்டிடக் கலைஞர் (இ. 1969)

1892 – சுவாமி விபுலாநந்தர், யாழ் நூல் எழுதிய ஈழத்து எழுத்தாளர், கவிஞர், இறையியலாளர் (இ. 1947)

1899 – குளோரியா சுவான்சன், அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர் (இ. 1983)

1910 – அய் ஜிங், சீனக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)

1945 – ஜெரால்ட் ஜே. டோலன், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2008)

1948 – எம். கே. முருகானந்தன், ஈழத்து எழுத்தாளர், மருத்துவர்

1955 – மாரியானோ ரஜோய், எசுப்பானியாவின் பிரதமர்

1955 – முல்லையூரான், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2006)

1963 – குவெண்டின் டேரண்டினோ, அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்

1985 – ராம் சரண், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

1988 – கம்சாயினி குணரத்தினம், இலங்கை-நோர்வே அரசியல்வாதி

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

                *இறப்புகள்*


•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1378 – பதினொன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1336)

1625 – முதலாம் யேம்சு, ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் (பி. 1566)

1898 – சையது அகமது கான், இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி, இதழாளர், இசுலாமிய சீர்திருத்தவாதி (பி. 1817)

1952 – கீச்சிரோ டொயோடா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1894)

1968 – யூரி ககாரின், உருசிய விண்வெளி வீரர் (பி. 1934)

1982 – பச்லுர் ரகுமான் கான், வங்காளதேச-அமெரிக்க கட்டிடக் கலைஞர் (பி. 1929)

1998 – டேவிட் மெக்லிலேண்ட், அமெரிக்க உளவியலாளர் (பி. 1917)

2005 – ரஞ்சன் ராய் டேனியல், இந்திய இயற்பியலாளர் (பி. 1923)

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H