தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான சான்றிதழ்
சரிபார்ப்புக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர்
பட்டியல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது
தற்காலிகமாகத்
தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக
ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 6ம் தேதி மாலை 5:30 மணி வரை தங்களது மூலச்
சான்றிதழ்களை ஸ்கான் செய்து தேர்வாணைய இணைய தளமான http://www.tnpsc.gov.in/ என்கிற முகவரியில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள்
சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில்
அவர்களுக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி
அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும்,
அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.