தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும்பயிற்சி நிறுவனத்தின் இணையவழி பட்டயப்
படிப்பில் பயிற்சி பெற தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப தொடக்கக்
கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ஏ.கருப்பசாமி அனுப்பிய
சுற்றறிக்கையில்,
‘‘அனைத்துவித நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையான அறிவியல்
பாட ஆசிரியர்களுக்கு கற்றல் தர நிலையை உயர்த்தும் பொருட்டு தேசிய
கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஆர்டிஇ) மூலமாக மே 1-ம்
தேதி முதல் இணைய வழியில் பட்டயப் படிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, அனைத்துவித நடு நிலைப் பள்ளிகளிலும் இதற்குத் தகுதியான ஆசிரியர்களின் விவரங்களை ஏப்ரல்15-ம் தேதிக்குள் தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனத் துக்கு அனுப்பி வைக்க வேண் டும். மேலும், இதுதொடர்பான அறிக்கையை deesection@gmial.com என்ற மின்னஞ்சல் முக வரிக்கு முதன்மை கல்வி அதி காரிகள் அனுப்ப வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.