***********
கல்வித்துறை இயக்குனர்களின் பணியிடமாறுதல் அறிவிப்பு இன்று வெளிவந்துள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக செயல்பட்டு வந்த முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குனராக மாறுதல் ஆணை வழங்கப்பட்டு இரண்டாவது முறையாக நாளை பொறுப்பேற்கிறார். அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு மாறுதல் என்பது சாதாரணமாக நடைபெறக் கூடியது தான். ஆனால் எந்தப் பொறுப்பிற்கு மாறுதல் பெற்றுச் சென்றாலும் அந்த பொறுப்பிற்கு தூய்மையான நிர்வாக செயல்பாடுகளால் ஒரு வரலாற்று முத்திரையினைப் பதித்து வரவேண்டும். முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இணை இயக்குநராக இருந்தபோது அறிமுகமானவர்.
மதிப்புமிகு முனைவர் வி.சி.இராமேஸ்வர முருகன் அவர்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்க வருகிறார் வாழ்த்தி வரவேற்கிறோம்.
மதிப்புமிகு முனைவர் வி.சி.இராமேஸ்வர முருகன் அவர்கள் பள்ளிக்கல்வி இயக்குனராக இரண்டு முறை பதவி வகித்தவர். மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராகவும் இரண்டு முறை பதவி வகித்தவர். எஸ்.சி.இ.ஆர்.டி இயக்குனராகவும் பதவி வகித்தவர். பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) இருந்தபோதும், தொடக்கக்கல்வி இயக்குநர் பொறுப்பில் இருந்த போதும் நாம் அவரிடம் முன்வைத்த சில ஆசிரியர்களின் கடுமையான பாதிப்புகளுக்கு தீர்வு கண்டு உதவியவர். எந்த நிலையிலும் இனிய அணுகுமுறையினை தன்னகத்தே கொண்டவர். விமர்சனங்கள் வந்த போதும் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் அன்புடன் பழக கூடியவர். நீண்ட காலம் கல்வித்துறையில் பொறுப்பு வகிக்கக் கூடிய வயது உடையவர். இனிய அணுகுமுறை தொடர பணி சிறக்க வாழ்த்துகிறோம். முனைவர் வி.சி.இராமேஸ்வர முருகன் அவர்கள் அண்ணன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்களின் மகன் திருமணத்திற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு பெருமாள்சாமி அவர்களையும் தவறாமல் அழைத்து வந்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சென்றவர்.
இயக்குனர்கள் பணியிட மாற்றம் எல்லாம் அரசியலில் சகஜம் என்பது போல் நடைபெறக்கூடியது தான் இருப்பினும் அவரவர்கள் செயல்பாடுகள்தான் அடையாள முகவரியாக என்றும் நிலைத்திருக்கக் கூடிய தாகும்.
வாழ்த்துகளுடன், வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.
மா. நம்பிராஜ், மாநிலத் தலைவர்.
அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச் செயலாளர்.
க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.








