பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு வருகின்ற 28.8.2019 அன்று நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளதுபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்குகின்ற வேலையில் இத்தகைய அறிவிப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வெகுவான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதன் அடிப்படையில் இணை இயக்குனர் ( பணியாளர் தொகுதி) திரு நாகராஜ முருகன் அவர்களை நேரில் சந்தித்து பணி நிரவல் கலந்தாய்வினை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தற்போதுள்ள பணிநிரவல் உபரி ஆசிரியர் பட்டியல் 1. 8. 2018 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டவை ஆதலால் 1. 8 .2018 நிலவரப்படி உபரி ஆசிரியர்கள் தேவைக்கு ஏற்ப மட்டுமே கலந்தாய்வுக்கு அழைக்கப்பட வேண்டும்
மேலும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் தீவிரமாக செயல்பட்டு அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்துள்ளனர்,
ஆதலால் 1. 8 .2018 நிலவரப்படி உபரி ஆசிரியராக அறியப்பட்டவர்கள் 1.8.2019 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் பணியாற்றி வருபவர்களை பணிநிரவல் செய்ய கூடாது என்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள விலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது. நமது நியாயமான கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்
நன்றி
இவண்
கு.தியாகராஜன்
மாநில தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்








