தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேர்வுநிலை ஊதிய நிர்ணயத்திற்கு தணிக்கைத் தடை செய்துள்ளதற்கு தீர்வு காண்போம். - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேர்வுநிலை ஊதிய நிர்ணயத்திற்கு தணிக்கைத் தடை செய்துள்ளதற்கு தீர்வு காண்போம்.

மதிப்புமிகு ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணன் அவர்களின் இன்றைய (22.08.19) மிக முக்கியப் பதிவு.
***********
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேர்வுநிலை ஊதிய நிர்ணயத்திற்கு தணிக்கைத் தடை செய்துள்ளதற்கு தீர்வு காண்போம்.
***********
மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் திருச்சி மண்டல தணிக்கையாளர்கள் கூட்டத்தினை 21.08.2019 அன்று தொடக்கக்கல்வி இயக்ககத்தில் கூட்டியிருந்தார்கள். தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) அவர்களும் கலந்துகொண்டார்கள். மண்டல தணிக்கையாளர் ஐந்து பேரும், தலைமை கணக்கு அலுவலர் (CAO) மற்றும்  கணக்காளர்களும் (AO) இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அரசாணை எண் 23ன்படி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை ஊதியம் 15600  தர ஊதியம் 5400 நிர்ணயம் செய்ததில் தவறு இருப்பதாக ஈரோடு , அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தணிக்கைத் தடை செய்துள்ளார்கள்.
இதனால் இவர்களுக்கு ஓய்வூதிய கோப்பு அனுப்ப இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை பிடித்தம் செய்வதற்கு எழுதியுள்ளார்கள். நமது தமிழக ஆசிரியர் கூட்டணியின் வேண்டுகோளின் பேரில் மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் இந்த கூட்டத்தினை கூட்டி இருந்தார்கள். அலுவலக நடைமுறையில் காலை பதினோரு மணிக்கு தொடங்கி பிற்பகல் இரண்டு மணி வரையில் இந்த கூட்டம் இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முடிவு ஆசிரியர்களுக்கு சாதகமாக இல்லை. மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் இந்த கூட்டம் இயக்குனர் அவர்களின் தலைமையில் தொடர்ந்தது. ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் கலந்து கொண்டார்கள். திருச்சி மண்டல தணிக்கையாளர்கள் மட்டும்தான் இந்த தணிக்கை தடையினை எழுதி வருகிறீர்கள். நீங்கள் தணிக்கை தடை செய்யாதவர்கள் அனைவருக்கும் ஓய்வூதிய கோப்பு மாநில கணக்காயர் அலுவலகம் சென்று அனுமதிக்கப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. 5400 தர ஊதியம் யார் யாருக்கு பொருந்தாது என்று தெரிவியுங்கள் என்று ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதற்கு கணக்கு அலுவலர்களும் தணிக்கையாளர்களும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் பதவி உயர்வு பணியிட தகுதி உள்ள பதவியாகும். பதவி உயர்வே இல்லாத பணியிடத்திற்கு தான் இந்த ஊதிய நிர்ணயம் பொருந்தும். இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இவையெல்லாம் பதவி உயர்வு பணி இடங்கள் ஆகும். இவர்களுக்கு எப்படி 5400 தர ஊதியம் வழங்க முடியும் என்று வாதிட்டார்கள். ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அத்துடன் அந்த பதவி உயர்வு நிலை முடிகிறது. இவர்களில் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருப்பவர்கள் மட்டுமே வாய்ப்பு இருந்தால் பதவி உயர்வுக்கு செல்ல முடியும். அவர்களை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியுடன் இணைக்காதீர்கள் என்று வாதிட்டார்கள். இதை அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வுக்கு சென்று பணி நிறைவு பெற்றவர்களுக்கு இது பொருந்தாது என்று எப்படி நீங்கள் கூறுகிறீர்கள். அவர்களுக்கு கூடுதல் கல்வித்தகுதி இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு பொருந்தும் என்கிறார்கள். அடுத்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை தர ஊதியம் 5400, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாதாரண நிலை தர ஊதியம் 4700, பதவி உயர்வு பணியிடத்தைவிட கீழ்நிலை பதவியின் தேர்வுநிலை ஊதியம்  அதிகமாக உள்ளது. அடிப்படை விதிகளின்படி இது தவறானது என்று வாதிட்டார்கள். கீழ் நிலை பதவியில் இருந்து மேல்நிலை பதவிக்கு பதவி உயர்வில் சென்றால் கீழ் நிலை பதவியில் பெற்று வந்த ஊதியம் மேல்நிலை பதவியில் குறையக் கூடாது என்று ஆதாரத்தை விளக்கினார். நீண்ட நேர விவாத முடிவிற்குப் பிறகு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு 12 9 2018 அன்று அரசாணை எண் 306ல் பதவி உயர்விற்கே இல்லாதவர்களுக்கு மட்டும் தான் இந்த அரசாணை பொருந்தும் என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் கூறினார்கள். எனவே நாங்கள் தணிக்கைத் தடை செய்ததில் தவறில்லை என மீண்டும் வலியுறுத்தினார்கள். தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களும் இணை இயக்குனர் அவர்களும் நமது கருத்தையே தணிக்கையாளரிடம் வலியுறுத்தினார்கள். கணக்கு அலுவலர்கள் நிதித்துறையிடம் சென்று எதிர்மறையான அனைத்து ஆலோசனைகளையும், அரசாணைகளையும் பெற்று வந்திருந்தார்கள். அனைத்து தெளிவுரைக் கடிதங்களையும் இயக்குனர் அவர்கள்  நம்மிடம் அளித்து மீண்டும் நீங்கள் பொறுமையாக சரி பார்த்து வாருங்கள் என்று தெரிவித்தார்கள். ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் இது தொடர்பாக எந்த முடிவும் எடுத்து இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்புவதை நிறுத்தி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். மேல்முறையீடு செய்துள்ளவர்களுக்கு எப்படி பொருந்தாது என்பதை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இருந்து அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் இதைப் பெற்றுக் கொண்டு விளக்கம் அளிப்பார்கள். நாங்களே இயக்கத்தின் சார்பாக முன் நின்று நிதித்துறையிடமிருந்து விளக்கங்களைப் பெற்று வருகிறோம். இயக்குனர் அவர்களும் நம்மை கலந்து கொண்டு PAY செல்லுக்கு அனுப்பி விளக்கம் கேட்பதாகவும் உறுதியளித்துள்ளார்கள். அதுவரையில் தணிக்கையாளர்கள் தணிக்கை தடை எதுவும் செய்யக் கூடாது எனவும் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். ஒரு நாள் முழுவதும் இயக்குனர் அவர்களும், இணை இயக்குனர் அவர்களும் இந்த தணிக்கை தடையிலிருந்து தீர்வு காண்பதற்காக பெரிதும் அக்கறை எடுத்துக் கொண்டு கவனம் செலுத்தியுள்ளார்கள் என்பதை நம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கூட்டம் முடிந்ததற்குப் பிறகும் இரவு 8.45 மணி வரையில் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் இது தொடர்பான பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் நிலைமை குறித்து கவலை தெரிவித்தார்கள். இயக்குனர் அவர்களும் அதை உணர்ந்தார்கள். இயக்குனர் அவர்களும் அதை உணர்ந்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். நிதித்துறையில் நேரில் சென்று விளக்கம் தருவதாக ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் உறுதி அளித்து உள்ளார்கள் அல்லது நீதிமன்றம் சென்று எங்களால் சரியான தீர்ப்பினை பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்து வந்தார்கள். எவரும் நம்பிக்கை தளர வேண்டாம்.

போராட்டத்திற்கு தயாராகுங்கள்.
**********
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை கண்காணிக்கும் அதிகாரத்தினை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அரசாணை எண் 145 நாள் 20.08.2019 அன்று வெளியிட்டுள்ளதை திரும்பப்பெறுகிற வரையில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் போன்ற இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொடர்ந்து களத்தில் இருந்து குரல் கொடுப்பதற்கு தயாராக வேண்டும். 27 ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ கூட்டம் சென்னையில் கூடுகிறது. போராட்ட முடிவுகளை அறிவிப்பார்கள். முடிந்தால் இம்மாதமே ஒரு ஆர்ப்பாட்ட போராட்ட  நடவடிக்கையில் ஈடுபடுவோம். ஈடுபடுவதற்கு காலம் கடத்தினால் அடுத்த கட்ட அபாய உத்தரவையும் வெளியிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும், முதன்மைச் செயலாளர் அவர்களும் தயார் நிலையில் உள்ளார்கள் என்பதை நம்மால் அறிய முடிகிறது. வியூகம் வகுத்து களத்தில் தொடர்ந்து துல்லியமான எதிர் தாக்குதலை நடத்துவோம். மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமானாக நாம் இல்லாவிட்டாலும் நமக்குள்ள பெருமைகள், பொது மரியாதைகள் எல்லாம் இழந்து ஆசிரியப் பணியையும் பார்க்க வேண்டாம், சங்கங்களையும் நடத்த தேவையில்லை. நாட்டை காப்பாற்றுவதற்கு வீட்டுக்கு ஒருவர் புறப்பட்டு வாருங்கள் என்ற புறநானூற்று வரிகளை மீண்டும் படிக்கின்ற உணர்வுடன் நமது மானம், மரியாதையை காப்பாற்றுவதற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இணைந்துள்ள அத்தனை ஆசிரியர்களும் களம் காணுவதற்கு புறப்படுங்கள். அழைப்பு வரும் போராட்ட களத்தில் ஒன்றிணைவோம். இந்த ஆணைகளை திரும்பப்பெறுகிற வரையில் தமிழகமெங்கும் நமது குரல் எதிரொலித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நில்லுங்கள். பாதுகாப்போம் பாதுகாப்போம் கல்வி உரிமையைப் பாதுகாப்போம்!!!. மீட்டெடுப்போம் மீட்டெடுப்போம்! ஒடுக்கப்பட்டு வரும் தொடக்கக் கல்வித்துறையினை, பள்ளிக்கல்வித்துறையினை மீண்டும் மீட்டு எடுப்போம்!! வெற்றி பெரும் வரை கண் துஞ்சாது களப்பணியில் தொடருவோம் வாரீர்... இயக்க ஆசிரியர்களே நாம் பெற்றுள்ள பெருமைகளை இழக்காமல் தடுத்து நிறுத்திட களம் காண ஒன்றுபட்டு வாரீர்!!! வாரீர்!!!

என்றும் உங்கள் உணர்வில் இரண்டறக் கலந்துள்ள அண்ணன்,
வா. அண்ணாமலை ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H