Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TNTET Result - 1,500 ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல் :
ஆசிரியர் தகுதி தேர்வில், 1 சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்ற நிலையில், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500
ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மத்திய
அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, தமிழகத்தில், 2011ல், 'டெட்'
என்ற ஆசிரியர் தகுதி தேர்வு முறை அறிமுகமானது. டெட் தேர்வில் தேர்ச்சி
பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதி
தேர்வில் தேர்ச்சி பெற, ஐந்தாண்டு அவகாசம் அளிக்கப்பட்டது.பின், இந்த
அவகாசம் ஒவ்வொரு ஆண்டும், நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, 2019, மார்ச்சிற்கு
பின், கால அவகாசத்தை நீட்டிக்க, மத்திய அரசு மறுத்து விட்டது.
இதையடுத்து, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத, 1,500 ஆசிரியர்களுக்கான
சம்பளத்தை நிறுத்தி, ஏப்ரலில், பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது.இது
தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, 'எட்டு ஆண்டுகளுக்கு மேல் அவகாசம்
வழங்கியும், ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. தகுதி தேர்வில் தேர்ச்சி
பெற்ற, 60 ஆயிரம் பேர், வேலைக்கு வர தயாராக உள்ளனர்' என, பள்ளி கல்வி துறை
தெரிவித்தது.
இதையடுத்து, 1,500 ஆசிரியர்களுக்கும் நிறுத்தப்பட்ட சம்பளத்தை வழங்க
உத்தரவிட்டதோடு, ஜூனில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி
பெறவும், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.இந்நிலையில், ஜூனில் நடந்த
தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. முதல் தாளில், 1 சதவீதம் பேரும்;
இரண்டாம் தாளில், 1 சதவீதத்துக்கும் குறைவாகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதாவது, இரண்டு தாளிலும் சேர்த்து, தேர்ச்சி பெற்றவர்கள், 1,000க்கும்
குறைவு என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிலும், புதிய
தேர்வர்களே, அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.அரசு உதவி பெறும்
பள்ளிகளில் பணியில் உள்ள, 1,500 ஆசிரியர்களில், குறைந்த அளவில் தான், தகுதி
தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களை தவிர, மீதமுள்ளவர்களின்
வேலைக்கு, ஆபத்து ஏற்பட்டுள்ளது.தேர்ச்சி பெறாதவர்கள், மீண்டும்
நீதிமன்றத்தை நாடி, கூடுதல் அவகாசம் பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








