நண்பர் வாங்கும் கடனுக்கு கியாரண்டி கையொப்பமிட போகிறாயா நண்பா.. சற்று கீழே நான் குறிப்பிடுவதை படித்துவிட்டு சென்று கியாரண்டி கையொப்பமிடவும்..
கியாரண்டர் என்றால் என்ன ? நீங்கள் ஒருவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் அளித்து கையொப்பமிடுகிறீர்கள். அப்படியென்றால் அவர் வாங்கும் கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள். ஒருவேளை அவர் கட்ட தவறினால் நீங்கள் தான் அந்த கடனுக்கு பொறுப்பு. சரி இதுமட்டும் தான் பிரச்சனையா என்றால் இல்லை. அப்படியே கீழ வாங்க..
நீங்கள் கியாரண்டி கொடுத்த நபர் ஒழுங்காக தவணை கட்டவில்லை என்றால் நீங்கள் கடன் கட்டவில்லை என்று உங்கள் சிபில் (CIBIL Score) பாதிக்கப்படும்.. அதுமட்டும் தான என்றால் அதுவும் இல்லை... கொஞ்சம் கீழ வாங்க ..கியாரண்டர் என்றால் என்ன ? நீங்கள் ஒருவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் அளித்து கையொப்பமிடுகிறீர்கள். அப்படியென்றால் அவர் வாங்கும் கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள். ஒருவேளை அவர் கட்ட தவறினால் நீங்கள் தான் அந்த கடனுக்கு பொறுப்பு. சரி இதுமட்டும் தான் பிரச்சனையா என்றால் இல்லை. அப்படியே கீழ வாங்க..
நீங்க அவசரத்திற்கு ஒரு கடன் தேவைப்படுகிறது வங்கிக்கு செல்கிறீர்கள் உங்களது பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு கடன் தரமாட்டார்கள், நான் உத்தரவாதம் தான் தந்தேன் எனது தவறில்லை என்று அவர்களை கேள்வி எழுப்ப முடியாது, பஜாஜ் பைனான்சில் 10000 ரூபாய்க்கு மொபைல் வாங்கவேண்டும் என்றாலும் சிபில் பார்ப்பார்கள். அட போப்பா நாங்க எல்லாம் கடன் வாங்கவே மாட்டோம், நான் கியாரண்டி தானே போட்டேன் நான் ஏன் அவன் வாங்கிய கடனை கட்டவேண்டும் என்று முரண்டு பிடிக்கிறீர்களா.. அப்படியே கொஞ்சம் கீழ வாங்க..
நீங்கள் கியாரண்டி கொடுத்த நபர் கடனை திருப்பி செலுத்தவில்லை அவரால் கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை என்றால் வங்கி SARFASI பிரிவு 2(எப்) சட்டப்படி கியாரண்டி கொடுத்தவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும்.
நீங்க கியாரண்டி கையொப்பம் போடும் முன் உங்கள் நண்பர் நிதி நிலைமை எப்படி, அவர் ஒழுங்காக கடனை கட்டிவிடுவாரா என்று ஆராய்ந்து கையொப்பமிடவும். முன்பின் தெரியாதவர்களுக்கு கண்டிப்பாக உத்தரவாதம் கொடுப்பதை தவிர்க்கவும்..
#CIBIL
#Guarantor
#CIBIL_Score