முடி வெட்டிக்கொள்வது பற்றிய பயம்
கொள்ளும் குழந்தைகளின் பயத்தை போக்க உதவும் வழிகளை பற்றி விரிவாக அறிந்து
கொள்ளலாம்.
முடி வெட்டிக்கொள்ள பயப்படும் குழந்தையை சமாளிப்பது எப்படி?
குழந்தைகள் சற்று வளர்ந்த பின், முதன்
முறையாக முடி வெட்டும் பொழுது, அச்செயல் குறித்து பயம் கொள்வர்;
குழந்தைகளில் சிலர் வேண்டுமானால் பயமின்றி முடி வெட்டிக் கொள்ள முற்படுவர்.
ஆனால், பெரும்பாலான குழந்தைகள் முடி வெட்டிக்கொள்ள பயம் கொள்வதாக
கருத்துக் கணிப்பு கூறுகிறது; அப்படி முடி வெட்டிக்கொள்வது பற்றிய பயம்
கொள்ளும் குழந்தைகளின் பயத்தை போக்க உதவும் வழிகள் பற்றி இந்த பதிப்பில்
படித்தறியுங்கள்..!
1. முடி வெட்டிக்கொள்ள அடம்பிடிக்கும் குழந்தைகளை முதலில் அமைதிப்படுத்தி,
அதை எதற்காக குழந்தை செய்ய வேண்டும், முடி வெட்டும் பொழுது என்ன நடக்கும்,
எப்படி வெட்டுவர், அதில் பயம் கொள்ள ஒன்றுமில்லை என்று எடுத்துக்கூறி
குழந்தையை அமைதிப்படுத்துங்கள்..!
2. முடி வெட்டிக்கொண்டிருக்கும் போது விளையாட்டுத்தனத்தை காட்டினால், என்ன
நிகழும் என்பதை ஒரு அன்பு கலந்த எச்சரிக்கையாக குழந்தைகளுக்கு தெரிவித்து
விடுங்கள்..! அது அவர்களை அமைதியாக உட்காரச் செய்யும்.
3. குழந்தைகள் முடி வெட்டும் போது அழுது ஆர்ப்பாட்டம் செய்தாலும், அவர்களை
அமைதிப்படுத்தி, விளையாட்டுக்காட்டி முடி வெட்டும் நபர் உள்ள சரியான,
உங்கள் குழந்தைக்கு பொருத்தமான கடையை தேர்வு செய்யுங்கள். அது குழந்தையின்
பயத்தை போக்க பெரிதும் உதவும்.
4. குழந்தைகள் அழுதால், அவர்களுக்கு எந்த விளையாட்டுப்பொருளை அளித்தால்,
அமைதியாக இருப்பார்களோ அல்லது எந்த சாக்லெட்டை குடுத்தால், அமைதியடைவார்களோ
அவற்றை எல்லாம் உடன் எடுத்துச் செல்லுங்கள். மேலும் குழந்தைகளிடத்தில்
அமைதியாக முடி வெட்டிக்கொண்டால், அவர்களுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச்
செல்வதாக, பிடித்ததை வாங்கி கொடுப்பதாக கூறி குழந்தையை தாஜா செய்ய
முயலுங்கள்..!
5. நீங்கள் முடி வெட்டிக் கொள்ளும் இடத்திலேயே, குழந்தையையும் உங்களுடன்
சேர்ந்து முடி வெட்டிக்கொள்ள செய்யுங்கள்; பெற்றோரான உங்களுடன் சேர்ந்து
ஒரு செயலை செய்யும் பொழுது, குழந்தைக்கு ஏற்படும் பயம் குறையும். குழந்தை
சந்தோஷத்துடன் உங்களோடு பேசி, விளையாடிக் கொண்டே முடி வெட்டிக்கொள்ள
முன்வரும்.