ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக முதனிலைத் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த மார்ச் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக மார்ச் 31 ஆம் தேதி முதன்மைத் தேர்வுகள், அதாவது மெயின் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, மார்ச் 31 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த RBI Assistant Main 2020 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தாக இந்த தேர்வு எப்போது நடைபெறும் என்பது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய விமானப்படையில் காலியாக உள்ள ஏர்மென் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மார்ச் 19 முதல் 23 ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரானோ வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தாக ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில், ஏர்மென் பணிக்கான தேர்வு நடைபெறும் என்று மத்திய ஏர்மென் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Delhi Subordinate Services Selection Board (DSSSB) எனப்படும் டெல்லி தேர்வாணையம், இன்ஜினியர் பணிக்கான தேர்வு நடத்த இருந்தது. சிவில், சுற்றுச்சூழல் இன்ஜினியர் ஆகிய பணிக்கான இரண்டாம் நிலைத் தேர்வு மார்ச் 30 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
இந்த தேர்வு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான காரணம் கொரானோவைரஸ் இல்லை என்றும், நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தேதிகள் (Revised Date) பின்னர் அறிவிக்கப்படும்.
விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில், மேனேஜ்மென்ட் டிரேய்னி (Management Trainee) பணிக்கான கணினி வழித் தேர்வு மார்ச் 23 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்வும் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை, www.vizagsteel.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்கான தேர்வு தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், புதிய தேர்வு தேதி விவரங்கள், விண்ணப்பதாரர்களு்கு SMS மூலம் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான சந்தேகங்களுக்கு 011-24369482; 011-24369483 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம்.
டெல்லியைப் போல், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அரசுப் பணிக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், ஜூனியர் கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கை அறிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கான தேர்வு மார்ச் 118 முதல் 26 ஆம் தேதி வரையில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா எதிரொலியாக இந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி வரையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.









