உடனே சொல்வார் 'இல்லை! இல்லை! நான் வீட்டில் ரொம்பவும் அன்பாக நடந்து கொள்வேன் என்பார். ஆனால் இது நமக்கே தெரியாமல் நாம் சொல்லும் பொய்.
மனமானது 'நான்' என்ற மையத்தைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்து அதுவே தன் எல்லையாக நிர்ணயிக்கிறது.
வட்டத்திற்கு உள் நிற்பவர்களை மனதிற்கு மிகவும் பிடிக்கிறது.
இதை நாம் அன்பு என்று நினைத்துக் கொள்கிறோம்.
எப்போது வட்டத்திற்கு உள் நிற்பவர்கள் நாம் நிர்ணயித்த எல்லைக் கோட்டை மீறுகிறார்களோ அப்போது மனமானது அவர்களின் மேல் வெறுப்பை உமிழ்கிறது.
இது எப்படி உண்மையான அன்பாகும்? எனக்கு இனிமையாக நடக்கும் வரை நான் அன்பு பாராட்டுவேன் என்பது வியாபாரமல்லவா?
சிறு குழந்தைகள் மனமானது பரந்து விரிந்து கிடக்கிறது. அதனால் அவர்கள் அன்பு உண்மையான அன்பாக இருக்கிறது.
யாரையும் அவர்கள் வெறுப்பதில்லை. எவ்வளவுதான் சண்டையிட்டாலும் அடுத்த நிமிடம் சமாதானமாக முடிகிறது.
மனிதன் வளர வளர 'நான்' என்ற மையத்தின் ஈர்ப்பு அதிகமாவதால் மனதின் எல்லை சுருங்கத் தொடங்குகிறது.
உண்மையான அன்பு மறைந்து போகிறது.
இந்த நிலை மாற, மனித உறவில் சிக்கல்கள் தீர, மனித நேயம் மலர மனமானது விரிவடைய வேண்டும்.
இதற்கு மனதை பயிற்றுவிக்க வேண்டும். இதற்கு ஒரு எளிய வழி தியானம். தியானத்தில் 'நான்' என்ற அகங்காரம் வலுவிழக்கிறது.
இதனால் மனமானது தனது எல்லையை விரிவாக்குகிறது.
மனதின் எல்லை விரியும் போது நான், எனது குடும்பம் என்ற நிலை மாறி அன்பானது எல்லையற்று பரவுகிறது.
அன்பால் ஆட்சி செய்வோம்...!
அன்பான வாழ்க்கை வாழ பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அன்பு மிகுந்த பாரதத்தை உருவாக்குவோம்.....!








