ஓடுகின்ற வண்டி நீ
ஒருநாள் நின்றுவிட்டால்
பருப்பும் அரிசியும்
பச்சை குழந்தைக்கு பாலும் பொறுப்போடு வாங்கிவர
புறப்பட்டார் நிருபர் ஒருவர்.
பாதி வழி போனபோது
சேதி ஒன்று நிறுத்தியது .
செய்திப் பிரிவு செல்பேசி சிணுங்கியபடி சொல்லியது .
போகும் வழியிலே
புதிதாய் கொரானா
பாதிப்பு இருக்குதாம்
பார்த்து சொல்வாய் .
பரபரப்பு ஆக்குவாய் .
கடமை வெறியேறி
களத்தில் இறங்கிட
வீட்டிலிருந்து மனையாட்டி
வெகு நேரமாய் அழைத்திட நாட்டுக்கான செய்தி
நாழிகைக்குள் வந்துடுவேன் என்றார் .
வீட்டுக்காரி வெறுத்துப்போய்
வெந்து நொந்து போனார் .
விரக்தியில் இடிந்து போனார் .
எல்லாம் சரியாகி
இரவு நெருங்கிடவே
இறை தேடும் பறவைகள்
உறைவிடம் திரும்பும் நேரம் .
மளமளவென செய்தி
சுடச்சுட மணக்கும்!!
மாநிலமே சுவைத்து மகிழும் !
மனசெல்லாம் சந்தோஷம் !! மலைமேலே புகழ் கிரீடம்.!!
வீட்டின் அழைப்பு
விருட்டென நினைவில் வர
காட்டாற்று வெள்ளம்
போட்டியில் தோற்கும் வேகம்.
பூட்டாத கதவு
வீட்டில் தொங்கும் .
மூட்டாத அடுப்பு மேலே
கூட்டாக பூனை தூங்கும்
காட்டுத்தீயாய் செய்தி தந்த
கடமை வீட்டில் எரியும் சோகம் .
பாலுக்கு அழுது வீங்கி
பசியோடு மயங்கிய குழந்தை !!.
சோறுக்கு வழியின்றி
சோர்ந்துபோன மனையாட்டி !!
சின்ன விழி திறந்து சிரிக்கும் உதடு சிறுகை நீட்டி குறுநகை பூக்கும் குழந்தை முகம் எங்கே ?
ஒரு நாளாவது உணவருந்தும் அழகைப் பார்க்க
தினந்தோறும் நச்சரிக்கும் மனையாட்டி எங்கே ? எங்கே ?
ஓரமாய் உட்கார்ந்தான் .
உள்ளுக்குள்ளே மனப்போராட்டம்.
ஊருக்கு உழைக்கும் உத்தமனே!
உன் குடும்பம் மறந்தவனே !
உன் நலம் துறந்தவனே !
*யாருக்கு உழைத்தாயடா? நீ
ஊருக்கு உழைத்தாயடா !*
எங்கே குழந்தை முகம்
எங்கே மழலை ஒலி ?
வறுமையோடு வாழ்ந்து
பெருமை கதைபேசி
பேதையாய் வாழ்ந்தாயடா !
செய்திபோதையில் சிரம் மேல் கனவுகளுடன்
கரம் வீசி வாழ்ந்தாயடா !
ஓடுகின்ற வண்டி நீ
ஒருநாள் நின்றுவிட்டால்
உன் குடும்பம் தெருவில் நிற்கும்.!
ஊருக்கு உழைத்தாயடா!
யார் பேருக்கு உழைத்தாயடா?
வாய் கவசம் போட்டுக்கொண்டு நோய்தொற்று வருமென்று
காதவழி போகின்ற உலகம் .
வாய் கவசம் இல்லையென்றால் நோய்த்தொற்று பரவும் என்று நாள்தோறும் செய்தி தரும் நல்லவனே ! உனக்கு நோய்தொற்று வராது என்று ஆர் சொன்னார் வல்லவனே !
அண்டத்தையே பழிவாங்கும் ஆபத்தான கொரானா
உன் பிண்டத்தை பலிவாங்கும் ஆபத்தை அறியா பாலகனே !
ஊருக்கு கூவுகி்ற உனக்கு
வாராது அது என சொல்வாயா ?
வந்தால் உன் கதி அறிவாயா ?
கூழுக்கு உழைக்காமல்
ஊருக்கு உழைத்துவிட்டு
உன்னைப்பற்றி நினைத்தாயடா ?
வைத்தியரும் காவலரும்
வாழும் தெய்வம் என்றால்
நித்தம் சுற்றி வரும் பூமி நீ
சுழன்று வரும் உன்னை
சுட்டி போற்றி புகழ்வதற்கு
சொல்லொன்று தேடுகின்றேன் !!!
ஒருநாள் நின்றுவிட்டால்
பருப்பும் அரிசியும்
பச்சை குழந்தைக்கு பாலும் பொறுப்போடு வாங்கிவர
புறப்பட்டார் நிருபர் ஒருவர்.
பாதி வழி போனபோது
சேதி ஒன்று நிறுத்தியது .
செய்திப் பிரிவு செல்பேசி சிணுங்கியபடி சொல்லியது .
போகும் வழியிலே
புதிதாய் கொரானா
பாதிப்பு இருக்குதாம்
பார்த்து சொல்வாய் .
பரபரப்பு ஆக்குவாய் .
கடமை வெறியேறி
களத்தில் இறங்கிட
வீட்டிலிருந்து மனையாட்டி
வெகு நேரமாய் அழைத்திட நாட்டுக்கான செய்தி
நாழிகைக்குள் வந்துடுவேன் என்றார் .
வீட்டுக்காரி வெறுத்துப்போய்
வெந்து நொந்து போனார் .
விரக்தியில் இடிந்து போனார் .
எல்லாம் சரியாகி
இரவு நெருங்கிடவே
இறை தேடும் பறவைகள்
உறைவிடம் திரும்பும் நேரம் .
மளமளவென செய்தி
சுடச்சுட மணக்கும்!!
மாநிலமே சுவைத்து மகிழும் !
மனசெல்லாம் சந்தோஷம் !! மலைமேலே புகழ் கிரீடம்.!!
வீட்டின் அழைப்பு
விருட்டென நினைவில் வர
காட்டாற்று வெள்ளம்
போட்டியில் தோற்கும் வேகம்.
பூட்டாத கதவு
வீட்டில் தொங்கும் .
மூட்டாத அடுப்பு மேலே
கூட்டாக பூனை தூங்கும்
காட்டுத்தீயாய் செய்தி தந்த
கடமை வீட்டில் எரியும் சோகம் .
பாலுக்கு அழுது வீங்கி
பசியோடு மயங்கிய குழந்தை !!.
சோறுக்கு வழியின்றி
சோர்ந்துபோன மனையாட்டி !!
சின்ன விழி திறந்து சிரிக்கும் உதடு சிறுகை நீட்டி குறுநகை பூக்கும் குழந்தை முகம் எங்கே ?
ஒரு நாளாவது உணவருந்தும் அழகைப் பார்க்க
தினந்தோறும் நச்சரிக்கும் மனையாட்டி எங்கே ? எங்கே ?
ஓரமாய் உட்கார்ந்தான் .
உள்ளுக்குள்ளே மனப்போராட்டம்.
ஊருக்கு உழைக்கும் உத்தமனே!
உன் குடும்பம் மறந்தவனே !
உன் நலம் துறந்தவனே !
*யாருக்கு உழைத்தாயடா? நீ
ஊருக்கு உழைத்தாயடா !*
எங்கே குழந்தை முகம்
எங்கே மழலை ஒலி ?
வறுமையோடு வாழ்ந்து
பெருமை கதைபேசி
பேதையாய் வாழ்ந்தாயடா !
செய்திபோதையில் சிரம் மேல் கனவுகளுடன்
கரம் வீசி வாழ்ந்தாயடா !
ஓடுகின்ற வண்டி நீ
ஒருநாள் நின்றுவிட்டால்
உன் குடும்பம் தெருவில் நிற்கும்.!
ஊருக்கு உழைத்தாயடா!
யார் பேருக்கு உழைத்தாயடா?
வாய் கவசம் போட்டுக்கொண்டு நோய்தொற்று வருமென்று
காதவழி போகின்ற உலகம் .
வாய் கவசம் இல்லையென்றால் நோய்த்தொற்று பரவும் என்று நாள்தோறும் செய்தி தரும் நல்லவனே ! உனக்கு நோய்தொற்று வராது என்று ஆர் சொன்னார் வல்லவனே !
அண்டத்தையே பழிவாங்கும் ஆபத்தான கொரானா
உன் பிண்டத்தை பலிவாங்கும் ஆபத்தை அறியா பாலகனே !
ஊருக்கு கூவுகி்ற உனக்கு
வாராது அது என சொல்வாயா ?
வந்தால் உன் கதி அறிவாயா ?
கூழுக்கு உழைக்காமல்
ஊருக்கு உழைத்துவிட்டு
உன்னைப்பற்றி நினைத்தாயடா ?
வைத்தியரும் காவலரும்
வாழும் தெய்வம் என்றால்
நித்தம் சுற்றி வரும் பூமி நீ
சுழன்று வரும் உன்னை
சுட்டி போற்றி புகழ்வதற்கு
சொல்லொன்று தேடுகின்றேன் !!!